இரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை
பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால்
கிடைக்கும் நன்மைகள் பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளைத் சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக்கீரையில் வளமான அளவில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்தசோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஒரு கப் பசலைக்கீரையில் கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம். |
Sunday, February 8, 2015
இரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment