Friday, February 27, 2015

எருக்கம் பூ…

மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….*****************************************************************
எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..
*******************************************************************
எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….
இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.
எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..
தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.
மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

No comments:

Post a Comment