Monday, February 23, 2015

வைட்டமின் சி அதிகம் உள்ள முந்திரிபழம்..!

***************************************************************************
பழங்கள் வகைகளிலேயே, முந்திரிபழத்தில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இந்த பழத்தில் டானின் எனும் வேதிப்பொருள் இருப்பதால், பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.

பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது.

மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது.

இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
Photo: வைட்டமின் சி அதிகம் உள்ள முந்திரிபழம்..!

No comments:

Post a Comment