தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க குறிப்புக்கள்..
**********************************************************************
பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
* அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
* அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
* முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
* ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்குப் புதிய நன்மை :-
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!

No comments:
Post a Comment