Monday, February 16, 2015

இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்

இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்
*************************************************************

புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.

புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.

புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.

மருத்துவப் பயன்கள் :

100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதச்சத்து புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளி யேற்ற வல்லது.

மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ் கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. புடலங்காய் முறைக் காய்ச்சலை போக்க கூடியது.

எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் முறைக் காய்ச்சல் மறைந்து போகும். புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.

பேய்ப்புடலின் மருத்துவப் பயன்கள்:

இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது-. தோல் நோய்களை விரைவில் குணப்ப டுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது, பித்தநோய்களைத் தணிக்ககூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. இதனுடைய வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.

காய்ச்சலைத் தணிக்ககூடியது. இலைகள் மேற்பூச்சாக பூசுவதால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகின்ற புழுவெட்டு குணமாகும். டிரைகோ சாந்தஸ் குகுமெரினா என்பது பேய்ப்புடலின் தாவரப்பெயர் ஆகும். அமிர்தபலா, வனபட் டோடா என்பவை அதன் வடமொழிப் பெயர்கள் ஆகும்.

பேய்ப்புடலின் இலைகளை மைய அரைத்து பசைபோல் ஆக்கி தோல் நோய்களின் மீது பூசி வர எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தோலில் நீர் வடியச் செய்யும் கொப்புளங்களோடு நமைச்சலும் தருகின்ற துன்பம் விரைவில் குணமாகும்.

* பேய்புடல் இலைகள் நான்கு அல்லது 5 இலைகளை எடுத்து சுத்திகரித்து ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறவைத்து எடுத்து வடிகட்டி ஆறாதபுண்கள், நாற்றமெடுத்து புழுக்கள் வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் ஆகியவற்றின் மீது ஊற்றிக் கழுவி வர விரைவில் குணமாகும்.

* இலைப் பசையை நாட்பட்ட கட்டிகள், சீழ்வடியும் ஆறாப் புண்கள் ஆகியவற்றின் மேல் பூசும் மருந்தாகவும் பயன்படுத்த விரைவில் அவை ஆறிவிடும்.

* பேய்ப்புடல் இலையைக் கொழுந்தாக எடுத்து நான்கைந்து இலைகளை ஓர் டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்கவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுப்போக்கினை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யும்.

* இலையை அரைத்துப் பிழிந்த சாறு 5 முதல் 10மி.லி வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி பித்தம் வெளியேறும்.

* இலைச்சாற்றை தலையில் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் சென்று குளித்துவிட தலைமுடி கொட்டுவது நிற்கும்.

* இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.

இந்நிலையில் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வைத்திருந்து பின் தலைக்கு குளிப்பதும் என்கிற பழக்கம் விரைவில் குணம் தர ஏதுவாகும்.

உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்து துன்பம் தரும் போது புடலங்கொடியின் இலைச் சாற்றை தீ நீராக்கி அத்துடன் கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி சுவைக்க பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதால் பித்தம் தணிந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* கடுமையான காய்ச்சல் ஏற்படும் போது 50கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் அதில் சம அளவு சேர்த்து மல்லி இலையையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறலைக் குடித்து வர கடுங்காய்ச்சலும் தணிந்து போகும். இந்த தீநீர் பித்த சம்பந்தப்பட்ட நோய்களையும் நாவறட்சி, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணமாக்கும்.

* கீல்வாதம் என்னும் மூட்டுவலி என்னும் நோயால் பாதிக்கப்படுவோர் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி உள்ளுக்கக் குடிப்பதாலும் வலிகண்ட இடங்களில் மட்டுமின்றி உடல் முழுதும் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் நாளடைவில் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு கல்லீரலிலும் ஆரோக்கியம் திகழும்.

* 30முதல் 50கிராம் வரை எடையுள்ள புடலங்காயைக் கொடியின் இலைகள் இளசாக தேர்ந்தெடுத்து சமபங்கு கொத்துமல்லி இலை சேர்த்து நீரிலிட்டு ஊறவைத்து காலையில் அதன் தெளிந்ந நீரைக் குடித்து வருவதால் நாளடைவில் மஞ்சள்காமாலை மறையும்.

* புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

* நன்கு முற்றிப் பழுத்த புடலையின் விதைகளை மட்டும் நீக்கி விட்டு விதையை உலர்த்தி வைத்து கொண்டு இரவில் நீரிலிட்டு ஊற வைத்திருந்து காலையில் அதன் நீரைப் பருக பேதியாகும். இதனால் குடல் சுத்தமாகும். புடலங்காயின் விதைகளை பேதி மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

* புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும். பேதியைக் கட்டுப்படுத்தும்

No comments:

Post a Comment