Monday, November 24, 2014

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

வசம்பு (பெயர் சொல்லான்) எனும் சஞ்சீவி!

• இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.

• வசம்பின் வேரும், அடிநிலமட்டத் தண்டும், இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகப் பயன்படுகிறது.

• வசம்புத் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும்.

• வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.

• நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.

• சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

• நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

• வசம்பை சுட்டு உரைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.

• ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.
(ஆதாரம்: பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000)

நூல்கோல் மகத்துவம்

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க காய்கறிக்  கடைகளில் கிடைக்கும் நூல்கோல் ஒன்றைச் சுத்தமாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆவாரம்பூ சிறிது சேர்த்து மிக்ஸியில் ஜூஸôகத் தயாரித்துக் கொள்ளவும். இந்த ஜூஸ் தயாரிப்புக்கு 100 முதல் 150 மில்லி.லிட்டர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. இந்தச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். 24 மணிநேரம் கழித்து சர்க்கரை அளவைச் சோதித்தால் ரத்தத்தில் 100 மி.கி.க்குமேல் சர்க்கரை குறைந்திருக்கும். வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கொருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும். இது ஒரு நம்பகமான மருத்துவம்.

Sunday, November 16, 2014

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !


நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.


மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை.குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான்சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.

தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.

எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!
- தேவராஜன்

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

ஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம் :

ஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம் :


இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

மஞ்சள்:-


இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

குங்குமப்பூ:-

குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி:-

இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை, மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

சீரகம்:-

உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான், இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 'தைமோக்யூனைன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாகச் சிறுநீரகப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க, இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன. கணையத்தில் உள்ள 'பீட்டா’ (Beta) செல்களைப் பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும். உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது.

பூண்டு:-

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது. கட்டிகளின்
வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுச் செல்களை அழிக்கிறது. வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில் உள்ளது. மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது. பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க
.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!