Sunday, November 16, 2014

நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !


நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.


மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை.குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான்சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.

தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.

எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!
- தேவராஜன்

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

No comments:

Post a Comment