Saturday, March 12, 2022

கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

*🌷🌷கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்*

பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயக்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது. உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

No comments:

Post a Comment