கண்ணாடி_அணிபவர்களே....
கிட்டப்பார்வை_தூரப்பார்வை……
சரி_செய்ய…
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும்.
இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற குறைபாடுகளை நாம் உணவு மூலமே சரியலாம்.
அந்த வகையில் கண் பார்வை சரியாக சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது❓
1)வகுப்புப்பாடங்கள் கவனிக்கும் போது தலை வலி அல்லது களைப் பாக இருப்பது.
2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படு வது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போ ன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.
வீட்டு_கை_வைத்தியம்
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.
👉 இது குணமாக
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.
செய்முறை 1
குங்குமப்பூ + தண்ணீர் + தேன்
ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அனைத்து பின் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வையுங்கள். பிறகு வடித்து, தேன் கலந்து பருகினால் போதும்.
இந்த தேநீரை பகலில் ஒரு வேளை அருந்தலாம். பார்வையை மேன்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆர்தரைட்டிஸ் நோயினால் ஏற்படும் வலியை குணப்படுத்தும். ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்(improve).
செய்முறை 2
சோம்பு + பாதாம்
சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து பருகுங்கள்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
#உணவு_வகைகளில்_கண்களைப் #பாதுகாக்க…
வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இர த்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுக ளுக்கு கேரட், பீட்ரூட், வெண்பூசணி, முள்ளங்கி, வெ ண்டைக் காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி க் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னா சி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம். அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.
சத்துக் குறைவால் கண்
நோய்கள் நீங்க…
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும்,
கொத்த மல்லி இலைச் சாறு 10 மில்லி,
தேங்காய் அரை மூடி,
ஏலக்காய் 2,
தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக்
கொள்ளவும்.
கொத்தமல்லி இலைச்சாறு,
கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண் டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில் லி)
தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாகசெய்யவேண்டும்)
பப்பாளிப் பழம் 4 துண்டு,
தேங்காய்ப் பால் அல்லது பசும்பால்
1 டம்ளர் (200 மில்லி)
தேவையான அளவு பனங்கற்கண்டு,
ஏலக்காய் 2
பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
💊புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5,
இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி,
1 ஸ்பூன் தேன்
பேரீச்சை பழத்தை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜுஸ் செய்துகொள்ளவும் அதில்
நெல்லிக்காய் பொடி, தேன் சேர்த்து
கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.
கண்புரை சரி செய்யும் ஒரு
எளிய இயற்கை மூலிகை கஷாயம்
👉தேவையான மூலப்பொருட்கள்❓
அண்ணாச்சி பூ பொடி - 5 கிராம்
கொத்தமல்லி பொடி - 5 கிராம்
நாட்டு சர்க்கரை - 10 கிராம்
தண்ணீர் - 150 மிலி
செய்முறை
👉🏿முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
👉🏿100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்
👉🏿மேலும் இந்த நீருடன் 5 கிராம் அண்ணாச்சி பூ பொடி மற்றும் கொத்தமல்லி பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்
👉🏿மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
👉🏿மேலும் வடிகட்டிய நீருடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
👉🏿இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் தொடர்ந்து 14 நாட்கள் குடித்து வந்தால் கண்புரை நோய் முற்றிலுமாக நீங்கும்.
கண் பார்வை தெளிவடைய…
பப்பாளிப் பழம் 2 துண்டு,
பேரிச்சம்பழம் 4,
செர்ரிபழம் 10,
அன்னாசி பழம் 2 துண்டு,
ஆப்பிள், திராட்சை 50 கிராம்,
மலை அல்லது ரஸ் தாளி
வாழைப்பழம் 2,
மாம்பழம் 2 பத்தை,
பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது)
இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
கண் பார்வை குறைபாடு நீங்க
கண் பார்வை வலுப்பெற
அவுரி எனும் நீலி ,
மஞ்சள் கரிசலாங்கண்ணி ,
வல்லாரை
இம் மூன்ரையும்
சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி தினமும்❓ 2 கிராம் அளவு பசும் பால்லில் அருந்திவர கண் பார்வை தெளிவாகும் .
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள்……
ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து, இரவு தூங்கும்போது கண்ணைச் சுற்றி பற்றுப்போட்டு பின், காலையில் எழுந்ததும் கழுவிவிட வேண்டும்.
இதை தினமும் செய்வதோடு திரிபலா பொடியையோ அல்லது சூரணத்தையோ தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
ஜாதிக்காய் பார்வையைத் தெளிவுபடுத்துவதோடு கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தையும் குணப்படுத்தும்.
கண்பார்வை தெளிவாகும்
கறிவேப்பிலை
நெல்லிக்கனி
இஞ்சி
சம அளவு நாட்டு சக்கரை சேர்த்து அரைத்து வடித்தது....
கரும்புச்சாறு குடித்த மாதிரி சுவை இருக்கும்.
நோய் எதிர்பு சக்தி தரும்,
இரும்புச்சத்து கூடும்,
இரத்தசோகை வராது,
கண்பார்வை தெளிவாகும்,
ஜீரணம் அருமையாக நடக்கும்......
அறிகுறிகள்
• கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
• கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள
மலைவாழைப்பழம்.
ஆப்ரிகாட் பழம்
தயிர்.
செய்முறை..
மலைவாழைப்பழம் ஒன்றுடன், 4 ஆப்ரிகாட் பழம் சேர்த்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
கண் மங்கல் நீங்க
மாலைக் கண் நோய்
அறிகுறிகள்
• கண் பார்வை மங்கலாக காணப்படுதல்.
• மாலைக் கண் நோய்.
தேவையான பொருட்கள்❓
பாகல் இலை.
மிளகு.
செய்முறை:,❓
பாகல் இலையுடன் 6 மிளகைச் சேர்த்துகொண்டு மைபோல் நசுக்கி இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பாக கண்களை சுற்றி பூசிக்கொண்டு, காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்தால் கண் பார்வையில் நல்ல மாற்றம் தெரியும்.
கண் பார்வை திறன்
அதிகரிக்க
அறிகுறிகள்❓
கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்❓
கேரட்.
துவரம் பருப்பு.
தேங்காய்.
செய்முறை❓
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
கண் பார்வை தெளிவாக
👉அறிகுறிகள்❓
கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்❓
கடுக்காய்த் தோல்
நெல்லிக்காய்.
▶️செய்முறை❓
கடுக்காய் தோலுடன், நெல்லிக்காய் கொட்டையை நீக்கி காயவைத்து பொடியாக அரைத்து தினமும் மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். கண் சூடு குறையும.
அறிகுறிகள்❓
கண் சம்பந்தப்பட்ட நோய்கள்.
👉தேவையான பொருட்கள்❓
அன்னாசிப்பழம்.
▶️செய்முறை❓
அன்னாசி பழத்தின் தோள்களை நீக்கிவிட்டு தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும
மங்கலான பார்வை.
⏩தேவையான பொருள்கள்❓
சீரகம்.
கொத்தமல்லி விதை.
வெல்லம்.
▶️செய்முறை❓
சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகியவற்றை எடுத்து இடித்து மைபோல சலித்து கொண்டு காலை, மாலை இதனை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.
கண் பார்வை அதிகரிக்க……💊
4 பேரிச்சம்பழம்,
50 கிராம் திராட்சை பழம்,
மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 ,
மாம்பழம் அல்லது பலாச்சுளை
2 துண்டுகள்
ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.
கண் பார்வை தெளிவடைய 💊
கரிசலாங்கண்ணித் தைலம் கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய்
ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டு வரவும்
வைட்டமின் "ஏ' --
ஒளி ஆற்றலை நரம்புத் தூண்டுதல் மூலமாக விழித்திரைக்கு எடுத்துச்செல்லுதல் மற்றும் பார்வை நிறமிகளை உருவாக்குவதன் மூலம் மாலைக்கண் நோயைத் தடுக்கும் முக்கிய பணியைச் செய்கிறது -- ஜாதிக்காய், கேரட், பச்சை காய்கறிகள், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய், சிறிய மீன்கள், ஆட்டு ஈரல் -- 600 மைக்ரோ கிராம்.
வைட்டமின் "சி' --
கண் புரையைத்தடுக்க உதவுகிறது, கண்ணில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு உறுதியளிப்பதுடன், சீரான ரத்த ஓட்டத்திற்கும் துணை புரிகிறது -- நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகள், தக்காளி, பெர்ரி வகை பழங்கள் -- 40 மி.கிராம்.
வைட்டமின் "ஈ' --
லியூட்டின் மற்றும் ஜுசான்த்தின் ஆகியவற்றுடன் இணைந்து கண் புரை தோன்றுவதை தடுக்கிறது. முக்கியமான கொழுப்பு அமிலங்களுடன் இணைந்து கண்களைக் காக்கிறது -- பாதாம், சூரியகாந்தி விதை, செறிவூட்டப் பட்ட தானியங்கள், கடல் உணவுகள், எண்ணெய் வித்துக்கள்,
கிவி பழம் --
துத்தநாகம் --
கல்லீரலில் சேமிக்கப்பட்டிருக்கும் வைட்டமின் "ஏ' சத்தானது ரத்தத்தில் கலந்து ரெடினால் என்ற பொருள் ரெடினாயிக் அமிலமாக மாறுவதற்கு துணை புரிகிறது -- கடல் உணவுகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, ப்ரோக்கோலி, பரங்கி விதை, பீன்ஸ், காளான் -- 15 மி.கிராம்.
செலினியம் --
ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு கண்களின் செல் சிதைவை தடுக்கிறது -- முளைகட்டிய கோதுமை, ஈஸ்ட், வால்நட், கொட்டை உணவுகள், மீன்கள், பசலைக்கீரை, முட்டை -- 55 மைக்ரோகிராம்.
லியூட்டின் மற்றும் ஜுசான்த்தின் --
விழித்திரை தேய்மானம் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது. கண் புரை வராமல் தடுக்கிறது -- பசலைக்கீரை, மிளகாய், முட்டை, ப்ரோக்கோலி -- 10 மி.கிராம் மற்றும் 2 மி.கிராம்.
ஒமேகா 3 மற்றும் 6 --
கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை தெளிவாக்குவதுடன் வைட்டமின் "ஏ' மற்றும் "ஈ' உட்கிரகிக்கப்படுவதற்கு உதவி புரிகிறது -- கடல் உணவுகள், மீன் எண்ணெய், கொட்டை உணவுகள், ஆலிவ் எண்ணெய், சீஸ், முட்டை, வெண்ணெய் -- 1 கிராம் மற்றும் 5 கிராம். கண்களுக்குத் தேவைப்படும் சத்துகள் நிறைந்த உணவுகளைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ தொடர்ச்சியாக உண்டு வருவதால், அந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் நீங்கப் பெற்று, ஆரோக்கியம் நிறைந்த கண்களுடன் ஒளிமயமான வாழ்க்கையும் பெறலாம்.
கண் பார்வை குறைபாடு நீங்க……
*மேலும் கை வைத்தியம்…❓❗*
சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைக்கும் காலங்களில் அதனை அவித்தோ அல்லது உணவில் சமைத்தோ சாப்பிட்டு வரலாம்.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது..
கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது.
❌மருத்துவரின் ஆலோசனையில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக்கூடாது.
அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.
கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது.
அவ்வப்போது குறைந்தது
5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.
உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வெண்பூசணிக்காய் (100 கிராம்),
வெற்றிலை (5), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம் போட்டு வந்தால் தூரப் பார்வை மற்றும் வயதானவர்களுக்கு உண்டாகும் சாளேஸ்வரம் குறைபாட்டிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், கண் பார்வையை சீராக வைத்துக் கொள்ளலாம்.
பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
எனவே இவற்றை உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குக் கூட பார்வைத் திறன் அதிகரிக்கும். குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.
காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் உணவில் உட்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.
ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை,
பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
50 மில்லி அருகம்புல் சாறோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.
கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும். கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.
விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.
இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.
ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உச்சி வெயிலில் அலையக் கூடாது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற் றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.
பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப் பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.
பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.
ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.
💊 50 மில்லி அருகம்புல் சாறோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.
💊 கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.
💊நெல்லிக்காய்,கடுக்காய்த் தோல், இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
💊அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.
💊சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
💊இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.
💊சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
💊 குளிப்பதற்கு…
கண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.
💊ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.
💊பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
💊அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.
💊செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.கண் பார்வை மங்கல் குறைய மூக்கிரட்டை வேர் பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.
💊மூக்கிரட்டை வேரை எடுத்து பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.
💊வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறந்தது செவ்வாழை தான். இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை தெளிவாக செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட கண் பார்வை குறைப்பாடு குறையும்.
💊தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.
💊முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தினால் கண் பார்வை அதிகரிக்கும்.
💊கொத்துமல்லிக் இலையுடன் துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும். கொத்தமல்லி இலையானது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை தரக்கூடியதாகும்.
💊கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
💊மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.
💊7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.
💊இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
💊வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
💊கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.
🔴 வேறு என்ன பயிற்சிகள் கண்களைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டும்❓
👉கண்களை கழுவுங்கள்
காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும்.
பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள்.
கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
🔴 கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்❗
வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும்.
கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள்.
ஒவ்வொருமுறை சிறுநீர் கலிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.
🔴 கண் பார்வை அதிகரிக்க, தினசரி உங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்❓❗
💊 இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
💊 வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
💊 முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
💊 இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.
💊 விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
No comments:
Post a Comment