சித்தம் தெளிவிக்கும் மகாவில்வம்.
*********************************
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் மந்திரத்தில் ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று குறிப்பிடப்படும் வில்வம் சிவ மூலிகைகளுள் சிகரம் மான மூலிகையாகும் மூன்று இதழ்களைக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண் குறிப்பதாக சிவனடியார்கள் போற்றுவர். இதேபோல் 5 ,7 ,10, இதழ்களைக் கொண்ட வில்வம் மரங்களும் உண்டு. இவை அனைத்தும் சிவ தத்துவத்தை விளக்கும் அம்சமாக உள்ளவை என சைவ சமய நூல்கள் போற்றும். சிவ வழிபாட்டின் முதற் பொருளான வில்வம் மரத்தை தொட்டாலும், பார்த்தாலும், '
அதீத சக்தி' (cosmic power) உடலுக்கு. உள்த்துக்கும் கிடைக்கிறது என்பது மகரிஷிகளும், ஆச்சாரியர்களும் அனுபவ பூர்வமாக அறிந்த உண்மை! .
மனக் கோளாறு காரணமாக உடல் நலிவுற்றவர்கள்; ஏராளமான பிரச்சினைகளில் மூழ்கி உடலையும் மனதையும் சீரழித்து கொண்டு பித்தம் முற்றியவர்கள் தினசரி காலையில் வில்வ இலைகளைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து அதில் 10 இலைகளை எடுத்து வாயிலிட்டு மென்று சிறிது வெந்நீருடன் ( தேன் 2 ஸ்பூன் கலந்து ) விழுங்கவும். 1 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு 48 நாட்கள், 96 நாட்கள் என சாப்பிட்டு வர பிற மருத்துவ முறைகளில் காணாத நன்மைகளை காணலாம். உள்மன சுமைகளை ( depression ) கலைந்து சமநிலை எய்த வில்வ இலைகள் உதவுகின்றன. இம்முறையை பின்பற்றும் போது கட்டாயம் மாமிச உணவு , புகை , காபி , டீ , அருந்தக்கூடாது.
சித்தம் கலங்காது இருக்க உதவும் வில்வம் பித்தம் தணியப் பெரிதும் துணைபுரிகின்றது. பித்த அதிகம் மூளையை பிடிக்கும்போது சித்த பிரமையும் , வயிற்றைப் பற்றும் போது குடற் புண்ணும் சர்மத்தை தாக்கும் போது சொறி, சிரங்கு , தோல் நோய் , கரப்பான் இன்று பல நோய்கள் உண்டாகின்றன. இத்தகைய பித்த தொடர்பான அனைத்து நோய்களையும் வரவொட்டாமலும் , வந்தாள் தொடர் சிகிச்சை மூலம் விரட்டவும் கீழ்கண்ட முறை முற்றிலும் பயனாகின்றது:.
பசுமையான வில்வ இலைகள் 10 , சீரகம் 2 சிட்டிகை இரண்டையும் அரைத்து சிறு உருண்டையாக்கி காலை வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மோருடன் பருகிவர 2 மாதங்களில் வியக்கத்தக்க பலனை காணலாம். தோல் நோய் அறிகுறி தென்பட்டால் முளையிலே கில்லி தடுக்க வில்வ இலைகள் 20 எடுத்து அத்துடன் மிளகு 10 , சீரகம் 2 சிட்டிகை சேர்த்து அரைத்து பசு வெண்ணெயுடன் கலந்து, தினசரி காலை வேளை பருகிவர 3 மாதங்களில் நிவாரனம் பெறலாம். நவீன மருத்துவ சிகிச்சை இந்நோய்க்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிட சிபாரிசு செய்வதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
குடற்புண், மூலநோய்,கண் பார்வை மங்குதல்,ஆகியவற்றை வில்வ இலைச் சூரணத்தைப் வெந்தயத்துடன் கலந்து ( அரை ஸ்பூன் வில்வ இலை சூரணம் + கால் ஸ்பூன் வெந்தயம் ) இளநீருடன் பருகிவர துரித பலன் காணலாம்.
இளமைத் தவறுகளால் விளையும் பால்வினை நோய்கள், புண், ரணங்கள் ஏற்படுமேயானால், வில்வப் பழச்சதையுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அவை விலகும் மலச்சிக்கல் வராது.
கடுமையான நீடித்த சரும நோயில் தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'வில்வம்' எனலாம். வில்வ இலையுடன் அதன் வேர்பட்டையும் கலந்து கசாயம் போல் செய்து தேன் கலந்து தினசரி 1 குவளை பருகிவர விரைவில் அவை விலகும். 'வெண்புள்ளி' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட முறைப்படி தயாரித்து காலை வேளை சாப்பிட்டு மாலையில் வில்வ காய்களைக் கொண்டு தண்ணீரால் அரைத்து ( சிறிது மஞ்சள் கூட்டவும் ) வெண்புள்ளி மீது பூசி உலரவிடவும்.தொடர்ந்து செய்து வர வெண்புள்ளிகள் மறைந்து மீண்டும் பழைய சருமத்தைப் பெற்றிடும்.
பனிக்கால ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் வில்வ இலை சூரணத்துடன் அதிமதுரம், சிற்றத்தை சூரணங்களை கால் ஸ்பூன் ( வகைக்கு ) எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, முற்றிலும் நிவாரணம் பெறலாம். இதனை மிகச் சிறப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தொடர்ந்து செய்தால் ஆஸ்துமா ( winter asthma ) வராது தடுக்கலாம்.
சுருங்கக்கூறின்,மனித உடம்பின் ராஜா உறுப்புகளான மூளை, இருதயம், வயிறு, நுரையீரல், நரம்புகளுக்கு 'வில்வ' மரம் உதவுகிறது . வில்வ மர இலை ,வேர் ,பட்டை, பழம் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'வில்வாதி லேகியம்' அற்புதமான கல்பமாகும். உடலை இருக்க வைத்து நோயின்றி காக்கும்!
சிவாலயங்களில் மட்டுமே இதுவரை பயன் ஆகிவந்த 'வில்வமரம்' விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளத்தில் உள்ள வேதியல் விஞ்ஞானியின் 'வில்வ இலைகளை' ஆராய்ச்சி செய்ததில் 'நீரிழிவு' நோயாளிகளுக்கு ஒரு 'ஸ்வீட்டான' செய்தியை அளித்துள்ளார். தினசரி காலையில் 10 முதல் இருபது வில்வ இலைகளை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு காலப்போக்கில் 'நீரிழிவு நோய்' கட்டுப்பட்டு விடக் கூடிய வகையில் மீண்டும் கணையத்தைச் சுரப்பிக்கத் தூண்டுகிறதாம். அத்துடன் நீரிழிவு நோயால் வரும் பிற பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றுகின்றதாம். பின்விழைவற்ற இம்முறையால் விரைவில் இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் நீரிழிவு நோயிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு.
சிலருக்கு சில நேரங்களில் கை, கால், முதுகு, பகுதிகளில் எரிச்சலுடன் கூடிய வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிடும் குணம் காண இயலாதவர்களுக்கு 'வில்வம்' ஒரு வரப்பிரசாதமாகும். தினசரி 5 முதல் 10 வில்வ இலைகளை ( வெட்டிவேர், சந்தனம் ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீருடன் ) மென்று விழுங்கி வர 'பித்த எரிச்சல்' எனும் மேற்கண்ட நோய் படிப்படியே தணியும்.
ஸ்தல விருட்சங்களுள் 'மகாவில்வம்' கையிலயங்கிரிக்குரியதாகும். மூவிலை கொண்ட வில்வத்தைப் தரிசித்தால் ஒரு சிவாலய தரிசனத்துக்கு இணையாகுமென்பர். 10 தளம் கொண்ட மகா வில்வத்தைத் தரிசனம் செய்வது என்பது 108 சிவாலயங்களை வலம்வந்த புண்ணியச் செயல் என்பர் பெரியோர், 10 இதழ்களைக் கொண்ட 'மகா வில்வத்தை' கரங்களிலே கொண்டு, சிவஸ்துதி' யை வாயார, மனதார தரிசித்த ராவணன் 'சாகாவரம்' பெற்றவன்; நாம் ராவணனைப் போல் பூஜிக்க முடியாவிட்டாலும், வில்வ இலைகளை கிடைக்கும்போது சிவ ஸ்துதி செய்து அதனை முறைப்படி அருந்திவர, குறைந்தபட்சம் 'நோயற்ற, வாழ்வு வாழலாம்' !
வீட்டுக்கு ஒரு வில்வ மரம் இனி இருந்தால். இல்லையொரு பிணித் தொல்லை யென நல வாழ்வு வாழலாம்! தூய்மையும், பூஜிக்கும் எண்ணமும் உள்ளவர்கள் வீட்டின் முன்புறம் வில்வப் கன்றுகளை நட்டு `துளசிமாடம்' போல் `வில்வமாடம்' வைத்து வழிபட்டு பயன்படுத்தலாம்! பொதுவாக வில்வமரத்தை தெய்வீக விருட்சமாக ஹிந்துக்கள் போற்றுவதால் ஆலயங்களில் மட்டுமே இதனை வளர்ப்பது ஐதீகம்!
1992 ஆம் வருடம் தினமணிகதிரில்
வெளிவந்த கட்டுரை.
*********************************
வைத்யர் சுகவனேஸ்வரன்
சேலம்.ஆத்தூர்.
*********************************
No comments:
Post a Comment