Monday, July 19, 2021

அனைவருக்கும் மிகச்சிறந்த சத்து தரும் சிறுதானிய மாவுக் கஞ்சி

அனைவருக்கும் மிகச்சிறந்த சத்து தரும் சிறுதானிய மாவுக் கஞ்சி

தே.பொருட்கள்..
கோதுமை - 100 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
கம்பு - 100 கிராம்
சாமை - 100 கிராம்
தினை - 100 கிராம்
வரகு - 100 கிராம்
மக்காச்சோளம் காய்ந்தது - 100 கிராம்
சோளம் - 100 கிராம்
பார்லி - 100 கிராம்
பார்லி அரிசி - 50 கிராம்
பச்சைப்பயிறு – 50 கிராம்
வெள்ளைக் கொண்டைக்கடலை – 50 கிராம்
உடைத்தக்கடலை – ஒரு கைப்பிடி அளவு
சோயா பயிறு – 50 கிராம்
முந்திரி பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
வெந்தயம் – 2 ஸ்பூன்
ஏலக்காய் – 4
சுக்கு – சிறு துண்டு

     மேற்கூறிய அனைத்தையும் தனித்தனியாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து 2 ஸ்பூன் மாவைக் கரைத்து கொதிக்க வைக்கவும். சுக்குச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் 1 ஏலக்காய் தட்டிப்போட்டு இறக்கவும்.
     வயது வித்தியாசம் இல்லாமல் இந்தக் கஞ்சியை அனைவரும் சாப்பிட்டு உடல் அரோக்கியத்தை பெறலாம்.

No comments:

Post a Comment