Thursday, July 22, 2021

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

*வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!*
 
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம்.  
 
இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது.  
 
வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். 
 
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும்.  
 
நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல. 
 
காரணங்கள்: 
 
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு 
வயிற்றில் உள்ள கிருமிகள், 
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள், 
ஹார்மோன் பாதிப்பு, 
மன அழுத்தம், 
நோய்வாய்ப்பட்ட நிலை, 
அமீபியாசிஸ், 
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் 
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம். 
 
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம். 
 
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம். 
 
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம். 
 
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம். 
 
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம். 
 
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம். 
 
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வெளிப்பிரயோகம்: 
 
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம். 
 
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம். 
 
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். 
 
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம். 
 
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம். 
 
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம். 
 
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம். 
 
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம். 
 
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம். 
 
சேர்க்க வேண்டியவை: 
 
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி. 
 
தவிர்க்க வேண்டியவை: 
 
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
 
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

No comments:

Post a Comment