*வெள்ளைப்படுதல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்*
வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு வெட்கம் வேண்டாமே..!
👉🏿 *வெள்ளைப்படுதல் என்பது என்ன?*
✍️நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்கவேண்டியதிருக்கிறது.
✍️அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகிவிடும்போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.
✍️வயதுக்கு வரப்போகும் பெண்களுக்கும், சமீபத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும்தான்
*அதிக வெள்ளைப்படுதல் ஏற்படும் என்பது சரியா?*
✍️சரியல்ல! பெண்களின் எல்லாப் பருவத்திலும் இது வரக்கூடும். குறிப்பாக 15 வயது முதல் மாதவிலக்கு இறுதியாக நின்று போகும் காலம் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கம். கருப்பையில் நோய் ஏதாவது இருந்தால் மாதவிலக்கு நின்றுபோகும் காலத்திற்குப் பிறகும் வெள்ளைப்படுதல் நீடிக்கும்.
*எப்போது வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்?*
✍️சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியாகி கருப்பைக்கு வரும் காலத்தில், மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும்- பின்பும், கர்ப்பகாலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்ய உறவின் போது பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
*நோய்த்தன்மையாகும் வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் என்னென்ன?*
✍️நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது அறிகுறியாகும். பிறப்பு உறுப்பில் அரிப்பும் ஏற்படும். உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கும் இருந்தால் அது உடனடியாக கவனிக்கத்தகுந்த அறிகுறியாகும்.
👉🏿 *வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?*
யோனிக்குழாயில் கிருமித் தொற்று இதற்கு முக்கிய காரணம்.
ஆண் உறுப்பின் நுனித்தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில் 'டிரைக்கோமோனஸ் வெஜைனாலிஸ்' என்ற கிருமிகள் காணப்படுகின்றன.
✍️இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
✍️கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்ய தொடர்பின்போது எரிச்சல், வலி ஏற்படும். மாதவிலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப்படும்.
✍️யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்டகாலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.
✍️கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் கருப்பையில் தொற்றிக்கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால் பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொருமுறையும் தண்ணீரால் கழுவுவதும் அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையைப் பொறுத்து வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.
👉🏿 *கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?*
✍️கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிடவும்கூடும்.
✍️அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மாத்திரைகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்புகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.
✍️சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால் தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெறவேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன. வெட்கமும், அலட்சியமும் கொண்ட பெண்களை வெள்ளைப்படுதல் அதிகம் பாதிக்கிறது.
No comments:
Post a Comment