Friday, July 23, 2021

சோம்பின் நன்மைகள்.

சோம்பின் நன்மைகள்.:


சோம்பு நாம் தினமும் சமையலில் சேர்க்கும் ஒரு பொருள். ஆனால் அதன் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருப்பதில்லை.  

சோம்பின் நன்மைகள்.:
செரிமான சக்தியைத் தூண்ட:
எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற:
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

வயிற்றுவலி, வயிற்று பொருமல் அஜீரணக் கோளாறுகளால்  வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

கருப்பை பலம்பெற கருப்பை பாதிப்பினால், சிலர் குழந்தை பேறு இல்லாமல் தவிப்பர். இவர்கள், சோம்பை (பெருஞ்சீரகத்தை) இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி  அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல், இரைப்பு மாற நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

காய்ச்சல் அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

No comments:

Post a Comment