Wednesday, August 29, 2018

மூலச்சூடு நீங்க அருகம் தைலம்

மூலச்சூடு நீங்க அருகம் தைலம்


அருகம்புல் வேர் – அரை கிலோ

நல்லெண்ணெய் – அரை லிட்டர்

அமுக்கிராக் கிழங்கு – 10 கிராம்

பூமி சர்க்கரை கிழங்கு – 10 கிராம்

     அருகம் வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து நல்லெண்ணெய் கலந்து அழுக்கிராக் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு ஆகியவற்றை பால் விட்டு நன்றாக அரைத்து கலக்கி சிறு தீயில் பதமுற காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும். இது அருகுத்தைலம்.
     ஒரு நாள் விட்டு ஒருநாள் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர தலைவெப்பம், நீர்க்கடுப்பு, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, நெஞ்சுவலி, மூலச்சூடு, வாதம், பித்தம் ஆகிய நோய்கள் தீரும்.

No comments:

Post a Comment