சிறிய வயது பெண் குழந்தைகளின் முறையற்ற உணவுமுறைகளின் விளைவுகள்
சரியாக 11-14 வயதில் துவங்கும் மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..இதற்கு காரணம் இக்கால உணவுமுறை 5 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும்.
RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும். அதிகமாக பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும் சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.
அதிகபட்ச புலால் உணவை இளம்வயதில் சாப்பிடுவதும் சீக்கிரம் பூப்பெய்வதற்கான காரணம் என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தற்போது மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள். பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம். அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. நாட்டு கோழிகறி சாப்பிடலாம்.
எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது.. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.
கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு.. மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகம். விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

No comments:
Post a Comment