Wednesday, August 29, 2018

மலச்சிக்கல்(CONSTIPATION )

மலச்சிக்கல்(CONSTIPATION )

பாதிநோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கலே.
கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். 

3 தேகரண்டி வி.எண்ணையுடன்,சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
 
திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்
 
கரிசாலை இலை5, தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்
 கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து,பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்

சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து,பொடித்து,2சிட்டிகை,சமன் மஞ்சள் தூளுடன்,50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்

தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்

முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்

வில்வ இலைத்தூள் அரைதேகரண்டி,வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண்,மலச்சிக்கல் குணமாகும்

ரோஜாகுல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும்.தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்

பாகல்இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்

No comments:

Post a Comment