Thursday, October 11, 2018

கத்தரிக்காய்



  • 1.வெண்பூசணி
  • 2.கத்தரிக்காய்
  • 3.கொத்தவரங்காய்
  • 4.புடலங்காய்
  • 5.அரசாணிக்காய்
  • 6.கோவைக்காய்
  • 7.முருங்கைக்காய்
  • 8.பீர்க்கன்காய்
  • 9.தேங்காய்
  • 10.எலுமிச்சை
  • 11.வெண்டைக்காய்
  • 12.வாழைக்காய்


2.கத்தரிக்காய்

உடலும் பூமியும்
நம் உடலில் உள்ள நீர்நிலைகளின் அளவு 75% இந்த பூமியில் உள்ள நீர்நிலைகளின் அளவும் 75%. பூமியிலிருந்து தோன்றிய உடல் பூமியின் பிள்ளையாகவே கருதப்படுகிறது. பூமிக்கு நாம் சொல்லும் அத்தனை அறிவியல் விதிகளும் உடலுக்கும் மிகத்துள்ளியமாக பொருந்தும்.

பூமியில் 75% கடல் நீர். அதன் உப்புத் தன்மையால் அது நமக்கு பயன் அளிப்பதில்லை. அந்த உப்பு நீர் மழையாக மாறி நிலத்திற்கு வரும்போது அது பயன்தரக்கூடியதாக மாறுகிறது. அது போல் நம் உடலில் 75% பிளாஸ்மா. ஒவ்வொரு செல்லிலும் நீர் உள்ளது. நமது உடலில் உள்ள நீரின் உப்புத்தன்மை சரியான அளவில் இருந்தால் மட்டுமே அது நமக்குப் பயன்படும். எனவே உப்புதன்மை அதிகமானால் ஒவ்வொரு செல்லும் பாதிப்படையும். முக்கியமாக செல்லின் வளர்ச்சி பாதிக்கப்படும், செல் வளர்வதற்கான சூழ்நிலை அமையாத மிகவும் போராட்டத்திற்குள்ளாகும்.

சிறுநீரகத்தின் பணி

உப்புத்தன்மை உடலில் அதிகமானால் நீர் ஓட்டம் இருக்காது. உப்பு ஆங்காங்கே தங்குவதால் உடலில் அழுத்தம் ஏற்படும். எனவே தேவையற்ற அதிகப்படியான உப்பை நாம் வெளியேற்றியே ஆகவேண்டும். நாம் உண்ணும் உப்பு சுவையூட்டிகளில் உள்ள உப்பு ( அஜீனோமோட்டோ) மருந்துகளில் உள்ள இரசாயனம், காற்றில் உள்ள விஷத்தன்மை இவைகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றன. இவைகள் அனைத்தையும் அழித்து உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். இந்த சுத்தப்படுத்தும் முக்கிய பணியை நமது சிறுநீரகம் செய்கின்றது. இந்த சிறுநீரகம் அல்லாமல் உடலின் ஒவ்வொரு செல்லும் இந்த பணியினை செய்கின்றன. சிறுநீரகம் என்பது தலைமையகம். உடல் முழுவதும் வேலை செய்யும் செல்களால் சீர்ப்படுத்த முடியாத வேலையினையும் சிறுநீரகம்சேர்த்து செய்யும். சிறுநீரகத்தின் மூலம் சுத்தப்படுத்தப்பட்ட நீர்நிலைகள் உடம்பின் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றது. அதில் விஷங்கள் இருப்பின் அது உடலை சீரழிக்கும்.

படைப்பில் முக்கியமானதுஅழித்தல் தன்மை. எனவே உடலுக்கு எதிர்மறையான நஞ்சுகளை அழிக்கும் ஆற்றல் வேண்டும். நஞ்சுகள் அழிக்காமல் இருந்தால் அவை ஓரிடத்தில் தேக்கமுறும். நமது உடலானது நீரை பெறுவதும். நீரை செரிப்பதும், நீரை வெளியேற்றுவதும் ஸ்தம்பித்து விடும். எனவே இந்த பிரச்சினைகளை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அனுபவிக்கும்.

கத்திரிக்காயின் நன்மைகள்

பெண்கள் தலைக்கு குளிப்பதால் தலைவலி ஏற்படும், அதனால் தலைக்கு குளிப்பதில்லை. இது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக மாறுகிறது. ஒரு மின்சாரம் செல்லும் ஒயரின் மேற்புறம் மின்கடத்தாப் பொருள் அமைந்துள்ளது. ஏதோ ஒரு நிலையில் அந்த பொருளில் பாதிப்பு ஏற்பட்டால், நீர் கசிவால் பாதிப்பு ஏற்படும். ஒயரில் உள்ள மின்சாரம் செல்லும் காப்பர் கம்பி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் மேலே அமைந்துள்ள இன்சுலேசனில் பாதிப்பு உள்ளது.

நோய் தொற்று காரணத்தினால் உடலில் உள்ள நீர்நிலைகள் நரம்புகளோடு தொடர்பு கொள்ளும்போது பாதிப்பு ஏற்படும். அந்த நீரில் உள்ள உப்பு, அமீபா,காளான் , பூஞ்சானம் போன்ற எந்த கிருமிகளாலும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம். எனவே நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கைகளில் நடுக்கம் ஏற்படும். இந்த நடுக்கம் ஏற்பட முக்கிய காரணம் நமது உடலில் உள்ள நீர்நிலைகள் கெட்டுப் போய் நரம்பினில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்பானது நரம்பின் மேல் உள்ள தோலை அரித்து விடும். கை நடுக்கத்திற்கு நாம் நரம்பு வைத்தியரை சென்று பார்ப்போம். ஆனால் இதற்கு அடிப்படையான காரணம் சிறுநீரில் உள்ள பிரச்சினையின் பாதிப்பு நரம்பில் வெளிப்படுகிறது. நரம்புகள் நன்றாக உள்ளன. ஆனால் நரம்புக்கு வேண்டிய சூழ்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிறுநீரக மண்டலமானது மற்ற 11 மண்டலத்திற்கும் உதவி செய்கிறது. மற்ற 11 மண்டலங்களும் சிறுநீரகத்திற்கு உதவி செய்கிறது. அப்படி உதவி செய்வதால் மட்டுமே உடலானது சரியான முறையில் இயங்க முடியும். நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் கைநடுக்கம் சிறுநீரகத்தால் ஏற்படுகிறது.

கண்களின் உட்புறம் நீர் உள்ளது. அதில் உப்புத்தன்மை ஏற ஏற ஒளி ஊடுரவும் தன்மை குறைந்து விடும். சூரிய ஒளி கண்களில் படும்போது கூச்சம் ஏற்படும். ஒளியை அவர்களால் பார்க்க முடியாது. அதற்கு காரணம் நம் கண்களில் உள்ள நீர்நிலைகளின் தன்மை மாறியிருக்கிறது. எனவே இதனை சரி செய்ய சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சரியான முறையில் இருக்க வேண்டும்

காதுகளின் உட்புறம் நீர் அமைந்துள்ளது. நாம் நேராக நிற்பதற்கு இந்த நீரானது உதவி செய்யும் எனவே காதில் உள்ள நீரின் உப்பின் அளவு அதிகமானால் ஒரு அழுத்தம் இருப்பதாக உணர்வார்கள்

மூக்கிலிருந்து வெளியேறும் சளியானது பச்சை நிறத்தில் வெளியேறும்.

உடலில் உப்புத்தன்மை அதிகமாகி கல்லீரலிலும் உப்புத்தன்மை அதிகரிக்கும். எனவே கல்லீரலானது அதை சுத்தப்படுத்த வேண்டி கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருக்க சொல்லி நமக்கு அறிவுறுத்தும். அதுவே நமக்கு நாக்கில் கசப்பு சுவையாக தெரியும், கசப்பு சுவை தெரிகிறது என்றால் உணவை உண்ணக்கூடாது என்று அர்த்தம். அதாவது கல்லீரல் தன்னைத் தானே சுத்தப்படுத்தி கொள்கிறது என்று அர்த்தம். ஆனால் நமது உடலின் மொழி என்னவென்று தெரியாமல் மேலும் மேலும் நாம் உணவினை உட்கொண்டு விடுகின்றோம். நம்மால் இயற்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. கல்லீரல் என்னால் இயங்க முடியவில்லை என்று கசப்பு சுவையை உணர்த்திய போதும் நாம் உணவினை உட்கொண்டு நம் உடலின் நல்ல இயக்கத்திற்கு எதிராக துரோகம் செய்கின்றோம்.

வெளியில் ஈரபதம் அதிகமானால் நமக்கு சளிபிடித்துக் கொள்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி என்பது வேறு. ஈரபதத்தினால் ஏற்படும் சளி என்பது வேறு. எனவே ஈரபதத்தினால் மூச்சு திணறல் ஏற்படும்.

பித்த நீர் நமது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. கொழுப்பும், நீரும் சேர்ந்து தான் பித்த நீர் உருவாகிறது. பித்தப்பையில் உள்ள பித்த நீர் இறுகி கல்போன்று ஆகிவிடக் கூடாது. இதற்கு காரணம் உடம்பில் ஏற்படும் இரசாயண மாற்றத்தின் காரணமாக உடம்பில் அதிக உப்பு சேர்வதன் காரணமாக இறுகும் நிலை ஏற்படும். இதுவே பித்தப்பையில் கல் உருவாக காரணமாகிறது.

வயிற்றில், குடலில் சில சமயங்களில் சாப்பிட்ட உணவில் உள்ள அதிகப்படியான உப்பின் தன்மையானது குடலில் உள்ள தோலை அரிக்க ஆரம்பித்து விடும். தோலை அரித்து விடுவதால் உணவு செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு செல்லும். மேலும் குடலின் இயக்கத்திற்கு உப்பானது மிகுந்த பிரச்சனைகளை உருவாக்குகிறது. வலியுடன் மலம் போகும். உடலில் உப்புத்தன்மை ஏற ஏற இதன் இயக்கம் பாதிக்கப்பட்டு ஒட்டு குடல் வர வாய்ப்புண்டு. இதற்கு காரணம் சிறுநீரக மண்டலத்தின் செயல்திறன் மட்டுப்படுவதால் நிகழ்ந்தது.

அதிக உப்புத் தன்மையின் காரணமாக சிறுநீரகத்தில் தோன்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் எந்தக் கற்களானாலும் கத்தரிக்காய் அதை கரைத்து விடும்

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் இருக்கும். அதிக உப்புத் தன்மையால் தோலில் பாதிப்புக்கள் ஏற்படும். காலில் ஆணி,கழுத்தில் மங்கு, முகத்தில் மருக்கள், ஏற்படும். இவை அனைத்திற்கும் தீர்வு கத்தரிக்காய்.

கத்தரிக்காயின் மூலமாக உடலில் உள்ள எந்த நஞ்சையும் அழிக்க முடியும்

கத்தரிக்காயின் வேலையை கடுகு செய்யுமா?

கத்தரிக்காயின் மூலமாக நமது பாரம்பரியமான கத்தரி வகைகளை அழித்து விட்டார்கள். இந்த கத்தரிக்காய் செய்யும் வேலையை கடுகு எண்ணை சிறப்பாக செய்யும். எந்த ஒரு நஞ்சையும் அழிக்கும் ஆற்றல் கடுகிற்கு உண்டு. எனவே கடுகையும் அழிக்கும் வேலை தற்பொழுது நடைபெறுகிறது.

நமது நாட்டின் பாரம்பரியமான நாட்டு கத்தரிக்காய்க்கு உடலில் உள்ள எந்த நஞ்சையும் அழிக்கும் ஆற்றல் உண்டு. இதற்கு இணையான பொருள் உலகில் இல்லை. அந்த கத்தரிக்காய் நமது கலாச்சாரத்தை விட்டு போய் விட்டது

சுத்தமான கடுகு எண்ணையை 1 ஸ்பூன் எடுத்து 10நிமிடம் வாயில் வைத்திருந்து முழுங்கினால் உடலில் உள்ள கழிவுகளை எளிதில் நீக்க முடியும்.

குணம் : சகிப்புத் தன்மை

ஒருவருக்கு ஒரு வெறுப்புத்தன்மை இருக்கும். அதனால் அவர், இது பிடிக்காது, அது பிடிக்காது என்ற வெறுப்புணர்வால் அவரது உடம்பால் சகித்துக் கொள்ள முடியாது. மனதில் இருப்பதை உடல் அப்படியே காட்டிக் கொடுக்கும். அடிக்கடி சிறுநீர் தொற்று, தண்ணீர் குடித்தால் கூடசளி பிடித்தல், ஐஸ்கீரிம் சாப்பிட்டால் சளிப்பிடிக்கும். அவர்களுக்கு எந்தவிதமான ஈரபதமும் ஒத்துக் கொள்ளாது. இந்த பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களிடம் சகிப்புத்தன்மை கிடையாது. நாம் சரியாக நடந்து கொண்டால் கூட, நம்மை யாராவது எதிர்மறையாக விமர்சனம் செய்தால், நாம் அவர் மீது நமது வெறுப்புணர்வை காட்டுகிறோம். இந்த பூமியில் ஒரு மனிதன் யார் மீதும் எதிர்மறை கருத்துகள் இல்லாமல் வாழ முடியுமா? என்ன தவறு செய்தாலும் என்ன கஷ்டங்கள் கொடுத்தாலும் எதிர்மறை சிந்தனைகள் வரகூடாது. அப்பொழுதும் அவர்களின் நன்மையைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எப்படியாவது அவர்களுக்கு நன்மை நடக்குமா என்று சிந்திக்கக்கூடிய மனப்பான்மை இருந்தால் அது தான் சகிப்புத்தன்மை. நமக்கு யார் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் நம் மனம் மற்றவர் மீது எதிர்மறையாக சிந்திக்கவில்லை என்றால் நமக்கு சகிப்புத்தன்மை இருக்கிறது என்று பொருள். நமது சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று செயல்படக் கூடாது.

இந்த உலகில் யார் ஒருவருக்கு சகிப்புத் தன்மையுள்ளதோ அவர்களால் தான் இந்த உலகினை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். சகிப்புத்தன்மையில்லையேல் இந்த சமூகத்திற்கு அவர்கள் எதிர்மறையாக செயல்படுவார்கள். ஒருவருக்கு அந்த மாதரியான சகிப்புத்தன்மை இருந்தது என்றால், எந்த சூழ்நிலையிலும் எதிர்மறையாக இல்லாமல் பிறர் நலன் பொருட்டு மட்டுமே அவரால் நினைக்க முடியும் என்றால் சுயம் பரமாத்மா அவருள் பிரவேசமாகி அவர் ஒரு வேலையினை செய்வார். அப்படியொரு குணாதிசயம் இருந்தால் பகவான் அவர் உடலில் இறங்கி அவருடைய காரியத்தை செய்வார். கடவுளிடம் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த கடவுள் நமக்குள் வருவதற்கு ஒரு விதியிருக்கிறது. அது தான் சகிப்புத்தன்மை. எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் நிவர்த்தி செய்வார்.

எனவே மொத்தமாக வருடத்தில் எத்தனை பிரதோஷங்கள் இருந்தாலும் வைகாசி மாதம் வரும் பெரிய பிரதோஷம் விசேஷமானது.

ஈஸ்வரனுக்கு இணையான காய்

சிவன் என்பவர் அழிப்பவர். எதனை அழிக்கின்றார்? எல்லா தீவினைகளையும், பாவங்களையும் அழிக்கின்றார். அது போல் நம் உடம்பில் உள்ள எந்த நஞ்சுகளையும் அழிக்கும் ஆற்றல் கத்தரிக்காய்க்கு இருப்பதால் அது ஈஸ்வரனுக்கு இணையான ஆற்றல் உடைய காய். அன்னாபிஷேக தினத்தன்று கத்தரி,சுரைக்காய் கொண்டு அன்னாபிஷேகம் செய்வார்கள்.

சகிப்புத்தன்மை ஒருவருக்கு இருந்தால் அவர் மூலமாக ஈஸ்வரன் பிரவேசமாகி பல நன்மைகளை செய்வார். ஈஸ்வரன் கோவிலில் ரிஷப வாகனம் ( நந்தி வாகனம் ) இருக்கும். ரிஷபம் பிறரது சீமையை தாங்கி செல்கிறது. அடுத்தவர் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து, ஏற்றுக் கொண்டு தாங்கி செல்பவரிடத்தில், அவருடைய உடலில் ஈஸ்வரன் பிரவேசிப்பார். இது தான் வைகாசி பிரதோஷத்தின் பொருள். இந்த பூமியில் நல்ல மனிதனிடம் சொல்வது கடவுளிடம் செல்வதற்கு சமம். எனவே தான் மக்கள் நந்தியின் காதில் சொல்கிறார்கள்

ஒவ்வொரு கோவிலிலும் தல விருட்சம் என்று ஒன்று இருக்கும். இது நேர்மறையாக செயல்படும். அதாவது ஒரு கல்லை எடுத்து போட்டாலும் அது பழத்தை தரும். அது போல் எதிர்மறையாக செய்தாலும் அது நமக்கு நன்மையை மட்டுமே செய்யும். எப்படி ஒரு சிறிய விதையிலிருந்து விருட்சம் வருகின்றதோ அது மாதிரி இந்த மனித சமுதாயத்திற்கு அடிப்படை ஆதாரம் சகிப்புத்தன்மை. எனவே தான் மரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தார்கள். அவர்களுக்கு எல்லாம் கிடைத்தது என்று கூற காரணம் இது தான்.

தவம் என்பதின் பொருள் என்னவெனில் எதன் பொருட்டும், யார் மீதும் எதிர்மறையாக சிந்திக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பது தான் தவம். எந்த காலத்திலும் யார் மீதும் எதிர்மறையான சிந்தனைகள் அணுவளவும் வரக்கூடாது, அது தான் உண்மையான தவம். சகிப்புத் தன்மையினை மிஞ்சிய தவம் உலகினில் ஏதும் இல்லை. கிராமங்களில் தவசி என்ற பெயர் உண்டு. காரணம் அவர் எதையும் தாங்கும் குணம் கொண்டவராக இருப்பார்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”.

அது போன்று எதிர்மறையாக செய்தாலும் நன்மையே செய்யும் குணாதிசயம் இருப்பது தான் சகிப்புத்தன்மை.

அப்படி நமக்கு சகிப்புத்தன்மை இல்லையெனில் நாம் கத்தரிக்காய் சாப்பிட்டு அந்த சகிப்புத்தன்மையினை பெற்றுக் கொள்ளலாம். சகிப்புத்தன்மையிருந்தால் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பிறர் பொருட்டு எப்பொழுதும் நன்மையே செய்யும் மனோ பாவனை இருந்தால் உடம்பில் உள்ள எந்த நஞ்சையைும் அழிக்க முடியும். இல்லையெனில் அந்த நஞ்சு நம் உடலிலும், மனதிலும் தங்கி விடும். அப்படி நஞ்சைஅழிக்க முடியவில்லை, ஏன் அந்த சிறுநீரக கல் கரையவில்லை என்றால் நம்மிடம் சகிப்புத் தன்மை குறைவாக உள்ளது என்று பொருள்.

தவறான எண்ணம் இல்லாமல் நோய் எப்படி வரமுடியும்? தவறான எண்ணம் மனதில் இருந்தால் மட்டுமே உடலில் நோய் வரும். உணவு ரீதியாக வரலாம். வந்தால் கூட மனநிலை சரியாக இருந்தால் எளிமையாக சரிசெய்ய முடியும். மனோபலமும், குணமும் இருந்தால் அது எப்படியும் நமது உடலினை தாங்கி பிடிக்கும், கைவிடாது, கைவிட்டால் அவனுடைய குணம் தவறானது.

கத்தரிக்காய் ஈஸ்வரனோடு தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. கோவிலில் உள்ள நந்தி ஈஸ்வரனை நோக்கியபடியே இருக்கும். இதன் காரணம் நமது முழு எண்ணமும் அந்த படைத்தவனின் மேல் இருக்க வேண்டும். நாம் படைப்பவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய உணர்வில் கலக்க வேண்டும். அவரை விட்டு நாம் எப்பொழுதும் விலகக்கூடாது, நமது யோகத்தை ஈஸ்வரனோடு வைக்க வேண்டும். நந்தீஸ்வரர் என்றாலும், யோகேஷ்வரர் என்றாலும் ஒன்று தான். நாம் நமது காய்கறி வைத்தியத்திற்கு யோகேஷ்வர் என்று பெயரிட காரணம் இந்த பூமியின் நலன் செழிப்பதற்கு , நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த பெயர் அமைக்கப்பட்டது.

மனிதன் மனிதனுக்கு தரும் அங்கீகாரம் என்பது வேறு. ஆனால் மனிதனுக்கு அந்த இறைவனே அங்கீகாரம் கொடுக்கக்கூடிய நிலை எப்பொழுது வரும் என்றால் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே சகிப்புத் தன்மையில்லாமல் உங்களுக்குள் வெறுப்புத் தன்மை ஏற ஏற சிறுநீரகம் சீர்குலையும். சகிப்புத் தன்மை இருந்தால் எப்பேர்பட்ட உப்புத் தன்மையையும் கரைத்து விடும். இல்லையெனில் கத்தரிக்காய் சாப்பிட்டு உப்புத் தன்மையினை கரைக்க வேண்டும். சகிப்புத் தன்மையினை கொடுக்கும் ஆற்றல் கத்தரிக்காய்க்கு உண்டு.

இந்த உணவுப் பழக்கத்தின் மூலமாக, ஞானக் கருத்துக்கள் மூலமாக ஒருவரால் அந்த ஈஸ்வரனை தொடர்பு கொள்ள முடியும்

மண்டலம் : சிறுநீரக மண்டலம்

குணம் : சகிப்புத்தன்மை

மாதம் : வைகாசி

செயல்பாடு : செல் வளர்ச்சி, நஞ்சுவெளியேற்றம்

கத்தரிக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்
http://naattumarunthu.blogspot.com/2018/10/blog-post_11.html

No comments:

Post a Comment