Wednesday, March 23, 2016

பச்சைப்பயறு சாலட்!

பச்சைப்பயறு சாலட்!

சமைக்காமலே சாப்பிடலாம்! சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ் - பச்சைப்பயறு சாலட்

தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு - கால் கப், வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா 1, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறை தண்ணீர் விட்டு, இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். காலையில் தண்ணீரை வடித்துவிட்டு, பயறை ஒரு துணியில் கட்டித் தொங்கவிட வேண்டும். மறுநாள், பயறில் முளைவந்திருக்கும். இந்த முளைகட்டிய பயறுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, மேலாக எலுமிச்சைச் சாற்றைத் கலந்து, கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

பலன்கள்: பச்சைப்பயறில் புரதம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற சத்தான உணவு. பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

No comments:

Post a Comment