இயற்கை வைத்தியம்
சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்தக் காட்டுப் பகுதியில் கல்யாண முருங்கை மரங்கள் நிறைய உண்டு.
''இந்த ஊர்ல யாருக்கு குழந்தை பிறந்தாலும் தலையில தண்ணி ஊத்தி நான்தான் குழந்தையை முதல்ல குளிப்பாட்டுவேன்'' என்று பெருமிதப்படும் நாகபூஷணம் பாட்டி, கல்யாண முருங்கையின் பயன்களைப் பட்டியல் போட்டார்.
''இன்னொரு உசுரை உருவாக்குற பொம்மனாட்டிகளுக்கு இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும். இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும்.
இந்த வைத்தியத்தை தொடர்ந்து மூணு மாசம் செஞ்சு வந்தா, குழந்தைப்பேறு இன்மைகூட நீங்கி கரு தங்கும். இப்படி குழந்தைப் பாக்கியத்துக்கு உத்தரவாதமா இந்த மரம் இருக்கிறதால, இதை அரச மரத்துக்குச் சக்களத்தின்னும் செல்லமாச் சொல்லுவாங்க!'' எதார்த்தமாய் பேசினார் மாதவரம் நாகபூஷணம் பாட்டி!
'கல்யாண முருங்கை குழந்தைப்பேறு அளிக்குமா?’ - ஆச்சர்யக் கேள்வியை சித்த மருத்துவர் மோகன ராஜிடம் கேட்டோம்.
வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த மரத்தின் இலையை நறுக்கி, அதோடு வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட்டு வந்தால், நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும். இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும்.
சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.
இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும் குறையும். இதனுடைய பட்டை பாம்புக் கடிக்கு நல்ல மருந்து!'' என கல்யாண முருங்கையின் மகத்துவங்களை விவரித்தார்.
தோட்டத்துக்கு மட்டும் அல்ல... மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!

This comment has been removed by the author.
ReplyDeleteநாகபூஷனம் அம்மா அவர்களை எப்படி
ReplyDeleteதாெடர்பு காெள்வது அய்யா