Sunday, March 6, 2016

பால்வினை நோய்க்கு மருந்தாகும் மர சுரைக்காய்

பால்வினை நோய்க்கு மருந்தாகும் மர சுரைக்காய் 


கடற்கரை ஓர நகரங்களில் மர சுரைக்காய் மரம் காணப்படுகிறது. மிக பெரிய நீண்ட காயை உடையதாக இந்த மரம் விளங்குகிறது. கைஜிலியா ஆப்ரிக்கான் என்ற தாவர பெயரை கொண்டதாக இது அழைக்கப்படுகிறது. மேலும் சிவ குண்டலம் என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. இதன் இலைகள் அடர்ந்த பச்சை நிறம் கொண்டதாகவும், இவற்றின் பூக்கள் அகலமான பிரவுன் நிறத்தை உடையதாகவும் விளங்குகிறது. இதன் காய்கள் சுமார் 3 அடி வரை வளரக்கூடியதாக காணப்படுகிறது.

கடற்கரை ஓரங்களில் இந்த மரம் அதிகம் வளர்க்கப்படுகிறது. புயலை எதிர்த்து நிற்கும் சக்தி மர சுரைக்காய் மரத்திற்கு உள்ளது என்று கூறப்படுகிறது. தசைகளை இறுக்கம் செய்வதற்கும், தளர்ந்து போன மார்பகங்களை இறுக்கமுடையதாக மாற்றுவதற்கும் இதன் காயை மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்துவதுண்டு. இதை உள்மருந்தாக பயன்படுத்தும் போது வயிற்று போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக ஆகிறது.

ரத்த போக்கு, சீத போக்கு ஆகியவற்றை இது கட்டுப்படுத்துகிறது. பால்வினை நோய்களை கட்டுப்படுத்தும் மருந்தை மர சுரைக்காய் பட்டைகளை பயன்படுத்தி தேநீர் ஒன்றை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மர சுரைக்காய் மரத்தின் பட்டைகள். பனங்கற்கண்டு சுவாசத்தில் ஏற்படும் நோய் தொற்றையும் இது கட்டுப்படுத்துகிறது. மர சுரைக்காயின் மர பட்டை அல்லது அதன் பொடியை சுமார் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.இந்த தேநீரை பருகுவதால் சீத பேதி, ரத்த கசிவு போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது. சிபிலிஸ் என்று சொல்லக் கூடிய பால்வினை நோய்க்கு இது அற்புதமான மருந்தாக அமைகிறது. மூட்டு வலிக்கு இதன் பட்டை மிக சிறந்த மருந்தாக அமைகிறது. வலி நிவாரணியாகவும் அமைகிறது.

இந்த மரத்தை வீட்டு முற்றத்தில் வளர்ப்பதால் குழந்தை பேறின்மை என்கிற குறைபாடு இதன் காற்றை சுவாசிப்பதால் குறைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் வீட்டு முற்றங்களில் வளர்க்கும் வழக்கமும் உள்ளது. சுற்றுசூழலை பாதுகாப்பதில் இது முன்னிலையில் விளங்குகிறது.

No comments:

Post a Comment