Saturday, September 3, 2016

சொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன

சொரியாசிஸ் - Psoriasis என்றால் என்ன

சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.
சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

சொரியாசிஸ் எவ்வாறு தோற்றமளிக்கும்?

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.

சொரியாசிஸ் தொற்று நோயா?

சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸ் வர காரணம் என்ன ?

சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும். குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும்.

சொரியாசிஸ் நோயின் விளைவுகள்

சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம். சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.

சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம். சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம். ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.

சொரியாசிஸ்க்கு என்ன மருத்துவங்கள் உள்ளன.
நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உபயோகப் படுத்தப்படுகின்றன, டாபிகல் ஸ்டீராய்ட்ஸ்
மேற்பூச்சுக்கள் (Steroids creams), போட்டோதெரபி, அல்ட்ரா வைலட், மெதாட்டுரக்ஸாட் (methotrexate) இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

Ø தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.

Ø ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.

Ø சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.

Ø மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.

Ø தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.

Ø சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.

Ø மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்,

சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).

இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.

இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.

வெட்பாலை -(Holarrhena Antidysenterica):

முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.

இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும். கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும். தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.

எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும். இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.

அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.

அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள். இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.

*பால்

*மது

*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.

சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).

*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.
இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.

காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும். சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை. இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது. அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.

1 comment:

  1. சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.

    வணக்கம் நண்பர்களே.....
    நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.

    சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும் அல்லது அழைக்கவும்.
    9566750595

    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...

    My video link.
    https://youtu.be/7sm2UQbC_N4

    ReplyDelete