*நாட்டுமருந்து வாட்சப்குழு +919787472712*
வாத வேங்கை வர்ம ஜோதி தைலம். (வசைவு தைலம்)
தயாரிக்கும் முறை மற்றும் பயன்பாடு
1. தேங்காய் எண்ணெய் 1 1/2.லிட்டர்
2. சீனம் 100 gm
3. நவசாரம் 100 gm
4. வெள்ளை பூண்டு 100 gm
5. மிளகாய் வத்தல் 10 gm
6. வெற்றிலை 5 no's
7. டர்பன் ஆயில் 30 ml
8. தேன்மெழுகு 10 gm
9. கட்டி கற்பூரம் 10 gm
10. வேம்பாடம் பட்டை 25 gm
11. பச்சை கற்பூரம் 5 gm
12. புகையிலை 10 gm
செய்முறை :
சீனம்,சாரம் ,தனித்தனியே பொடித்து கொள்ளவும்.பூண்டு தோல் உரித்து சேர்த்து அரைத்து வழித்து இரும்பு சட்டியில் போட்டு,மிளகாய் வற்றல்,வெற்றிலை,புகையிலை கிள்ளி போட்டு எண்ணெய் முழுவதும் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்கம் கறுத்து சட்டியில் ஒட்டும்.தைலம் காய்ச்சும் ஆரம்பம் முதல் முடிவு வரை கரண்டியால் கிண்டி கொண்டே இருக்கவும்.கற்கம் மணல் பதம் வரும் போது சட்டியை கீழ் இறக்கி வடி கலசத்தில் தேன் மெழுகை சீவி போட்டு,கட்டி கற்பூரம்,பச்சை கற்பூரம் பொடித்து சேர்க்கவும்.வடிகலசத்தில் மேல் துணியை சல்லடைபோல் வேடு கட்டி வேம்பாடம் பட்டையை பொடித்து தூவி அதன் மேல் சூடான தைலத்தை வேம்பார் பட்டை தூளின் ஊற்றவும்.எண்ணெய் சிவப்பாக மாறி கீழிறங்கி மெழுகு சூடங்களை தன்னுடைய சூட்டால் கரைத்துசேர்த்துக்கொள்ளும்.பிறகு டர்பன் ஆயில் சேர்க்கவும்.
தீரும் நோய்கள் :
1. மூட்டு வலி
2. கைகால் குடைச்சல்,
3. ரத்தக்கட்டு
4. அடிபட்ட வீக்கம்
5. சுளுக்கு
6. நரம்பு பிசகல்
7. சதைப் பிடிப்பு
8. மத மதப்பு
9. குதிங்கால் வலி
10. கழுத்துப் பிடிப்பு
11. மூச்சுப் பிடிப்பு
12. தோள்பட்டை வலி
13. உடம்புவலி
14. பக்க வாதம் முதலியவை தீரும்.
உபயோகிக்கும் முறை :
தூங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 சொட்டு வர்ம தைலம் எடுத்து சூடு உண்டாகும்படி கையினால் பாதித்த பகுதியில் தேய்க்கவும்.மறுநாள் காலை சுடு தண்ணீரில் குளிக்கவும்.or உப்பை சட்டியில் தெறிப்பு அடங்க வறுத்து துணியில் முடிந்து இளஞ்சூட்டில்ஒத்தடம் கொடுக்கவும்
No comments:
Post a Comment