Sunday, July 31, 2016

உடல் எடையைக் குறைக்கும் மாங்காய்

உடல் எடையைக் குறைக்கும் மாங்காய்

மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும் தன்மை இந்த மாங்காய்க்கு உண்டு.
man
மாங்காயில் உள்ள சத்துக்கள்
மாங்காயில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள்
கால்சியம் – 10 மி.கி, சுக்ரோஸ் 14.8 மி.கி, பைபர் 1.8 கி, இரும்பு 0.13 மி.கி, மக்னீசியம் 11 மி.கி, பொட்டாசியம் 156 மி.கி, புரோட்டின் 0.51 மி.கி, வைட்டமின் ஏ 38 மி.கி, வைட்டமின் சி 27.7 மி.கி, தயமின் 0.058 மி.கி, வைட்டமின் B12 0.057 மி.கி, வைட்டமின் பி3 0.548 மி.கி, வைட்டமின் பி5 0.180 மி.கி
மருத்துவ பயன்கள்
மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.
மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால்
வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும்.
ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.
சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.
மருத்து பயன்கள்
மாங்காய் சாப்பிடுவதன் மூலம் புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும், மேலும் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் சாப்பிடுவதற்கு பதிலாக மாங்காய் சாதம் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு
இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

No comments:

Post a Comment