Thursday, July 14, 2016

புளியாரைக் கீரை

புளியாரைக் கீரை

புளியாரைக் கீரை மழை, பனிக் குளிர்காலங்களில் நீரோடைகளின் அருகில் ஈரப்பசை மிகுந்த நிலங்களில் தழிழகம் முழுவதும் கானலாம்.சக்தி மிகுந்த கீரை வகைளில் சேர்ந்ததாகும். நல்ல பசியை தூணடவும் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை உண்டு பண்ணவும், உடலை நன்கு கெட்டிப்படுத்தி பலமும் , நோய் எதிர்ப்பு சக்தியையும் ஏற்படுத்துகிறது.

புளியாரைக் கீரைக்கு புளிப்பு சுவை உடையதால் உணவாகப் பயன்படுத்தும் போது புளியை குறைக்க வேண்டும். இதை பருப்புடன் நெய் சேர்த்து பயன்படுத்தி வந்தால் பித்த மிகுதியால் வந்த தொல்லைகள் நீங்கும் மூல வாய்வு,பித்த மயக்கம்,இரத்த மூலம் முதலிய நோய்கள் நீங்கும்.

புளியாரைக் கீரையை அரைத்து சிறிது மஞ்சளும் சேர்த்து இரத்தக் கட்டிகள் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் வைத்து வர கட்டிகள் கரைந்து விடும்.
பன்னீர் விட்டு புளியாரைக் கீரையை நன்கு மை போல அரைத்து முகப்பரு, கொப்பளங்கள் மற்றும் தீப்பட்ட இடங்களின் மேல் பூச நல்ல பலன் கிடைக்கும்.

புளியாரைக் கீரைபுளியாரைக் கீரையுடன் மிளகு,சீரகம்,சுக்கு சேர்த்து துவையல் செய்து நெய்யுடன் சோற்றில் முதல் நான்கு பிடி பிசைந்து பகல் உணவில் மட்டும் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நாட்பட்ட குண்ம நோய்கள் நீங்கிவிடும்.

வெள்ளை வெங்காய சாறு ஐம்பது மில்லி புளியாரைக் கீரை சாறு ஐம்பது மில்லி கலந்து மெல்லிய துணியில் ஊறவைத்து நெற்றிப் பொட்டில் போட்டு வர நீங்காத தலைவலியும் நீங்கும்.

புளியாரைக் கீரையை பசுமையாக எடுத்து இடித்து சாறு பிழிந்து முப்பது மில்லி முதல் ஐம்பது மில்லி வரை தினமும் காலை வேளை கொடுத்து வர மேற்கூறிய நோய்கள் யாவும் விலகும்.

புளியாரை கீரையை அரைத்துப் பசுவின் மோரில் கலந்து காலை வேளை மட்டும் ஒரு மணடலம் உட்கொண்டு புளி,காரங்களை குறைத்துக்கொண்டால் வயிற்றில் உள்ள ரணம்,குன்ம நோய்கள், நாட்பட்ட மூலநோய்கள் யாவும் நீங்கும்.

www.naattumarunthu.blogspot.in
www.facwbook.com/naattumarunthu
whatsaap Group 9787472712

No comments:

Post a Comment