Tuesday, June 28, 2016

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…


Image result for ரோஜா பூ படங்கள்
1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத்
தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து
பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு
நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில்
காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன்
பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த
நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை
பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக்
போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ
வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்
கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும்
பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள்
அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.
தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ்,
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும்
நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

No comments:

Post a Comment