Sunday, June 26, 2016

பவளமல்லி மரம்

பவளமல்லி மரம்.

மூலிகையின் பெயர் :- பவளமல்லி மரம்.

தாவரப்பெயர் -: NYCTANTRES ARBORTRISTIS.

தாவரக் குடும்பம் :- OCEACEAE..

வேறுபெயர்கள் -:
 பாரிஜாதம், பவழமல்லி முதலியன.

பயன்தரும் பாகங்கள் -:
இலை, மலர்கள், பட்டை முதலியன.

வளரியல்பு :–
 பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் தென் கீழ் ஆசிய நாடு. தாய்லந்து நாட்டில் காஞ்சனபுரி மாநிலத்திலும் காணப்பட்டது. இது இந்தியா முழுதும் வளரக்கூடியது.

வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் வழமான மண்ணில் நன்கு வளரும்..இதற்கு சிறிது வெய்யிலும் நிழலும் தேவைப்படும்.

10 முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளையுடையது.
 எதிர் அடுக்கில் அமைந்தருக்கும். இலைகள் சொரசொரப்பாக இருக்கும் .இலைகள் தளவாடங்கள் மெருகேற்றப் பயன்படும்.

பூக்கள் பவழ நிறம் பட்டு வகைத் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும். கிளை நுனையில் பூக்கும். பூக்கள் பவழக் காம்பும், வெண்நிறமும் மல்லிகைப்பூப் போல்  அமைந்திருக்கும், நறுமணம் உடையது. பூக்கள் 5 – 7 இதழ்களையுடையது.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும். இந்த மரம் பற்றியும் பூக்கள் பற்றியும் புராணங்களில் இரண்டு கதைகள் சொல்வார்கள்.

இதன் காய்கள் தட்டையாக வட்ட வடிவில் காணப்படும். இரண்டு விதைகள் இருக்கும்.இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். இந்த மரம் தலவிருட்சமாகக் கருதப் படும். சிவத்தலங்களில் காணலாம். கட்டிங்மூலம் தான் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :–

 ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.

இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம்.

இம்மர இலையைச் சுடுநீரில் போட்டு நன்றாய் ஊரவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை அருந்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.

வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாளைக்கு இரு வேளை கொடுக்கு, குணம் பெறலாம்

இத்தகைய பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டுபிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.

 பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.

பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

 விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

No comments:

Post a Comment