Sunday, June 26, 2016

இளநீரின் வகைகள்:


    கேளி இளநீர்.Image result for இளநீரின் வகைகள்:



இளநீரின் வகைகள்:
    செவ்விள நீர்.
    பழைய இளநீர்.
    உணவுக்கு முன் அருந்தும் இளநீர்.
    உணவுக்கு பின் அருந்தும் இளநீர்.
    மூன்று வித இளநீர்.
    புதிய பழைய இளநீர்.
    பச்சை இளநீர்.
    மஞ்சள் கச்சி இளநீர்.
    அடுக்கு இளநீர்.
    கரு இளநீர்.
    சோரி இளநீர்.
    ஆயிரங்கச்சி இளநீர்.
    குண்டறக் கச்சி இளநீர்.

செவ்விள நீர்:

    தினமும் செவ்விள நீரைப் பருகினால் பித்த விருத்தி, தாகம், வழி நடையால் ஏற்பட்ட இளைப்பு, அயர்வு பற்பல ஷயம் ஆகியவை நீங்கும்.

பழைய இளநீர்:

    அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி அதாவது வயிறு எரிதல் உண்டாகும்.

உணவுக்கு முன் அருந்தும் இளநீர்:

    காலை ஆகாரத்துக்கு முன் இளநீர் பருகினால் பசி நீங்கும். குன்மம் உண்டாகும். மாலையில் அருந்தினால் பெரிய கிருமிகள் ஒழியும்.

உணவுக்கு பின் அருந்தும் இளநீர்:

    உணவு உண்டபின் இளநீரைப் பருகினால் வாத பித்த கோபம் தனியும். தனிப்பித்த தோஷம் விலகும். தாராளமாக மலம் கழியும். அதி தீபனமும் உண்டாகும். நோய் அணுகாது. தேகம் மினுமினுக்கும்.

மூன்று வித இளநீர்:

    மட்டை சீவி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ‌ஆற்றிய இளநீரானது இருமல், சலதோஷம், வறட்சி, சுரம் இவற்றைப் போக்கும். செவ்விள நீரானது பித்த தோஷத்தை நீக்கும். கெவுளி பாத்திரை என்னும் இளநீரை அருந்தினால் உஷ்ணம் நீங்கும்.

புதிய பழைய இளநீர்:

    இள வழுக்கையுடைய புதிதாகப் பறிக்கப்பட்ட இளநீரைப் பருகினால் பித்த கோபம் விலகும். பழைய இளநீரைப் பருகினால் ஜலதோஷம் முதலான ரோகங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

கேளி இளநீர்:

    இதைப் பருகுபவர்க்கு ரத்த மேகம், மலக்கிருமி, விதாகம், மந்தாக்கினி, கரப்பான், அதிசுரம் ஆகியவை நீங்கும்.

பச்சை இளநீர்:

    இதை அருந்தினால் சீழ்ப்பிரமேகம், பழைய சுரம், கபாதிக்கம், எரிகிருமி, யானைச் சொறி, கண்நோய் இவற்றைப் போக்கும்.

மஞ்சள் கச்சி இளநீர்:

    பித்ததோஷம், சோபை, சிலேஷ்ம ஆதிக்கம், பழைய சுரம் ஆகியவை விலகும்.

அடுக்கு இளநீர்:

    நித்திரைக்கு முன் அடுக்கு இளநீரை அருந்தினால் கபதோஷமும், மலப்பை பற்றிய கிருமியும் போகும். நன்மையும் உண்டாகும்.

கரு இளநீர்:

    கருமை இளநீரால் கப ஆதிக்கமும், புழு நெளிகின்ற கரப்பானும் நீங்கும். ஜேகம் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சோரி இளநீர்:

    இதைப் பருகினால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சியும், சன்ன கிருமியும் போகும். தேகம் அழகாகும். தெளிவான பேச்சு உண்டாகும்.

ஆயிரங்கச்சி இளநீர்:

    வெப்பமும், பசியும் ஆமவாதமும் நீங்குவதோடு கபம், தொந்தம், நமைச்சல், பிரணஞ் சூழ் குன்மம் ஆகியவை தீரும்.

குண்டற கச்சி இளநீர்:

    இதனால் அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும். ஜடராக்கினி உண்டாகும்.

No comments:

Post a Comment