இளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய். இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அனைத்து விடுங்கள். இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டைபொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள்.
இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.
* சமீபகலாமாக இளநரை மிகப் பெரும் பிரச்சனையாகி வருகிறது. இதற்கு அற்புதத்தீர்வு நெல்லிக்காயில் இருக்கிறது.
மருதாணி இலை - 1 கப்,
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் -5,
முழு சீயக்காய் -4,
சுத்தம் செய்த புங்கங்கொட்டை -1
இவற்றை முந்தைய நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் இவற்றை அரைத்து விழுதாக்குங்கள். இதைத் தலைக்கு `பேக்' ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த குளியல் போட்டால் நரை முடி அத்தனையும் கருப்பாகிவிடும். அடுத்த இளநரையும் வராது.

* இளநரையை போக்கும் மற்றொரு அற்புத சக்தி கரிசலாங்கண்ணியில் இருக்கிறது. கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள், இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து. அதனுடன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்புன், தயிர் -1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதைத் தலைக்கு `பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள், வாரம் 2 முறை இந்த `பேக்' போட்டுக் குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது.
* சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும். வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணின் தனித்துவம்!
செம்பருத்தி பூ - 1கப்,
கரிசலாங்கண்ணி இலை - 1 கப்...
இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.
இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும் வரை... அதாவது சுமார் 10 நாட்கள்... வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.

No comments:
Post a Comment