Saturday, March 12, 2022

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய !!!

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய !!!*

_எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:_

* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* விந்து அல்லது விரைகளில் உள்ள
தொற்றுநோய்
* பால்வினை நோய்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை

தீர்வுகள்:

°அன்னாசிபழம் மற்றும் முள்ளங்கி சம அளவு சாறு எடுத்து, இரண்டும் கலந்து பருகி வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

° அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க
வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக
இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள்
நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

° சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.

° நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

° தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து
வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

° ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.

° எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை,கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும்.



🌷🌷

கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

*🌷🌷கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்*

பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயக்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது. உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்

*🌷🌷மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்*

இப்போது பலருக்கு 30 வயதிலேயே பல் ஆட்டம் காண்கிறது. கிருமிகள் குடியிருக்கின்றன. பல் கூச்சம் அதிகரிக்கிறது.

இந்த நேரத்தில் `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழி எல்லோருக்கும் நினைவில் இருக்கும். வேலமரக்குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகி திடமாகும் எனவும், வேப்பங்குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் எனவும் நம் முன்னோர் கூறி வைத்துள்ளனர்.

பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம், என்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்கள் பளிச்சென்று காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும். பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் `செல்போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக்கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும், என்கிறது சித்த மருத்துவம்.

வைட்டமின்-சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ நோயினால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் வேப்பங்கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். அத்துடன், வைட்டமின்-சி குறைபாட்டைப் போக்க மருத்துவ சிகிச்சை தேவை. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.




🌷🌷

கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:

*கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:*

1.சுத்தமான நல்லெண்ணெய் – 100 மி
2.நேத்திரப்பூண்டு – 50 கிராம்
3.தும்பை -10 கிராம்
4.கரிசாலை -10 கிராம்
5.பொன்னாங்காணி -10 கிராம்
6.கற்றாழை – 10 கிராம்

*செய்முறை விளக்கம்:*

✍️ வரிசை எண் 3 முதல் 6 வரை உள்ள இலைகளை சுத்தம் செய்து அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள்

✍️ பிறகு நல்லெண்ணெய் ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து அதில் நேத்திரப்பூண்டு அரைத்து அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும் பிறகு 50-மி யாக சுண்டியதும் வடிகட்டி கொள்ளவும்

✍️ வடிகட்டிய எண்ணையில் ஏற்கவனே தயார் செய்து வைத்துள்ள சாறு கலந்து கொள்ளவும் 

✍️ கலந்து வைத்து கொண்டு இந்த எண்ணெயை மதியசூரிய வெயிலில் படும்படி ஒரு 3 மணிநேரம் வைக்கவும்

பிறகு,இந்த எண்ணை பயன்படுத்த தயார்

*பயன்படுத்தும் முறை:*

✍️காலை மற்றும் இரவு ஓய்வு நேரங்களில் இரு கண்களுக்கும் 2 சொட்டு அளவு விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும் பிறகு 30 நிமிடம் ஓய்வில் இருக்கவும்,பிறகு தேவைப்பட்டால் முகம் கழுவி கொள்ளலாம்

✍️இதை 15 முதல் 60 வயதினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், குழந்தைகள் எடுக்க கூடாது

✍️அதிகப்பட்சம் 21 நாட்கள் பயன்படுத்தினால் போதும்

*மருத்துவ பயன்கள் என்ன???*

1.கண்களை சுத்தம் செய்யும்
2.புரை ஆரம்ப நிலையில் தடுக்கும்
3.கண் எரிச்சல் கண் அரிப்பு உடனடியாக தீரும்
4.கண் வலி நீங்கும்
5.தூரபார்வை மற்றும் கிட்டபார்வை தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது

*கவனிக்க:*

நாட்டுமருந்து கடைகளில் இந்த தைலம் விற்பனைக்கு கிடைக்கும் இதில் ஒரிஜினல் மட்டுமே பலன் கொடுக்கும் மற்றவை பலன் கொடுக்க வாய்ப்பில்லை தயவுசெய்து விலை குறைவாக வாங்க வேண்டாம்

இது ஒரு பாரம்பரிய வைத்திய முறை கண் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

ரத்த அழுத்தம் BP நிரந்தரமாக சரியாக / குறைய இயற்கை வைத்திய முறை செய்முறை விளக்கம்.

*ரத்த அழுத்தம் BP நிரந்தரமாக சரியாக / குறைய இயற்கை வைத்திய முறை செய்முறை விளக்கம்:*

*தேவையான மூலப்பொருட்கள்:*

1.கருங்காலிப்பட்டை - 50 கிராம்
2.சத குப்பை - 50 கிராம்
3.சீரகம் - 50 கிராம்
4.கருஞ்சீரகம் - 50 கிராம்
5.ஏலக்காய் - 20 கிராம்

*சூரணம் செய்முறை விளக்கம்:*

1 to 4 வரை கூறியவற்றை எடுத்து சுத்தம் செய்து வறுத்து தூள் செய்து வைத்து கொள்ளவும்

அதனுடன் ஏலக்காய் இடித்து கலந்து கொள்ளுங்கள்

மூலப்பொருட்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்

*சூரணம் சாப்பிடும் முறை:*

100 மி நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து சுண்டவைத்து சூடாக டீ போல காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்கள் முன் தினமும் தொடர்ந்து 2 மாதம் சாப்பிட இரத்த அழுத்த நோய் குறையும்.

*மருத்துவ பலன்கள்:*

1.ரத்த அழுத்தம் குறையும்
2.தலைசுத்தல் சரியாகும்
3.பாத அரிப்பு சரியாகும்
4.கண் எரிச்சல் குணமாகும்
5.இதய துடிப்பு சீராகும்

இது ஒரு பக்கவிளைவு இல்லாத இயற்கை சூரணம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது / சர்க்கரை உள்ளவர்களுக்கு மட்டும் பலன் குறைவாக கிடைக்கும்,மற்றபடி அனைவருக்கும் ஏற்றது

உடல் எடை குறைய ஒரு எளிய பானம்...

*உடல் எடை குறைய ஒரு எளிய பானம்*

*தேவையான மூல பொருட்கள்*

1.துளசி - சாறு 1 ஸ்பூன் 
2.எலுமிச்சை - சாறு 1 ஸ்பூன்
3.சுத்தமான தேன் - ஒரு ஸ்பூன்
4.பட்டைப்பொடி - 1/2 ஸ்பூன்
5.தண்ணீர் - 200மி

*செய்முறை:*

✍🏿 தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து அதில் பட்டை பொடி கலந்து சிறிது நேரம் சுண்ட கொதிக்க வைக்கவும்

✍🏿 அதில்,துளசி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக ஆற்றி கொள்ளவும்

✍🏿 அதில் சுத்தமான நாட்டு தேன் கலந்தால் போதுமானது

*சாப்பிடும் முறை*

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை சூடான பதத்தில் குடிக்க வேண்டும் பிறகு ஒரு மணி நேரம் கழித்து உணவும் சாப்பிடலாம்

*பயன்கள்*

1.உடல் எடை குறையும்
2.வயிறு சதை, கை, கால் சதை குறையும்.
3.வயிறு சுத்தமாகும்
4.வாயு குறைபாடு நீங்கும்
5.உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

*கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்*

1.எண்ணெய் உணவுகள்,இரவு நேர அசைவம்,பேக்கரி உணவுகள் கூடாது

2.எண்ணையில் பொறித்த அசைவம் கூடாது

3.தினசரி குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், சுடுநீர் என்றால் மிக நல்லது

4.அரிசி உணவு அளவாக சாப்பிட வேண்டும், குறைத்து கொள்ளுங்கள்

5.முட்டை வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுங்கள்

முக்கியமாக,இரவு நேரமாக தூங்க பழகி கொள்ளுங்கள்,காலை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்


*முக்கிய குறிப்பு*

இந்த பானம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க மிக அருமையாக வேலை செய்யும் ஆனால் அதற்கு சில உணவு கட்டுப்பாடுகளும்,உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்...எதையும் செய்யாமல் உடல் எடை மட்டும் குறைவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று...🙏🏼

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தேவையான மூலப்பொருட்கள்*

1.பரங்கிக்காய் விதை - 50 கிராம்
2. வெள்ளரி விதை - 50 கிராம்
3. நெருஞ்சில் முள் - 50 கிராம் 
4. வில்வ வேர்ப்பட்டை - 50 கிராம் 

*செய்முறை விளக்கம்:*

மேற் கூறிய பொருட்களை காயவைத்து வறுத்து சுத்தம் செய்து கொள்ளவும்

காயவைத்து பொருட்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளுங்கள்

10 நாட்களுக்கு வரும் வரை குறைவான அளவில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்,இல்லை என்றால் கட்டி கட்டி கொள்ளும்

*சாப்பிடும் முறை:* 

தினமும் காலை வெறும் வயிற்றில் உணவுக்கு முன் மட்டும் 200 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு (5 கிராம்) கலந்து நன்கு கொதிக்க வைத்து 100 மி யாக சுண்டியதும் சூடாக குடிக்கவும்

குறைந்தது ஒரு நாள் ஒன்றுக்கு 4-5 லி தண்ணீர் குடிக்க வேண்டும்

*மருத்துவ பயன்கள்*

1.சிறுநீரக கற்கள் வெளியேறுகிறது
2.சிறுநீரக அடைப்பு சரியாகும்
3.சிறுநீரக எரிச்சல் அடியோடு சரியாகும்
4.பித்தப்பை கற்கள் கரையும்

இந்த சூரணம் அனைவரும் ஏற்றது...சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் பலன் கொடுக்காமல் போக அதிக வாய்ப்புண்டு...