Sunday, December 14, 2014

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

————————————————————–
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை :-

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை :-


வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர 

மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

Saturday, December 13, 2014

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி :

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி :-
+++++++++++++++++++++++++++++++++++++
காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா… ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.
இந்த… கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும் போது எதுக்காகஇந்த முரட்டு வைத்தியம்?
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி வந்தாஅந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்… துணியைக் காணோம்னுபாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா மூணுநாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும். அப்படி வந்தா ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும்.
கால் ஆணி நீங்க இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (24 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம் :

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்” என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’.
“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.
சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

http://naattumarunthu.blogspot.inhttp://naattumarunthu.blogspot.in/

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழிhttp://naattumarunthu.blogspot.in/ 

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, 

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ

தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ

அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. 

''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு.

''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்
உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல்,
தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது.
பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப்
பொருமல், குதவழிக் காற்றோட்டம்
போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.


* உடலைப் பருமடையச் செய்யவும்,
வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும்,
சுட்டை சமப்படுத்தவும், ரத்த
ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன்
அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும்
நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது.
இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம்
தேனில் குழைத்து சாப்பிட்டால்
வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப்
பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில
உறுப்புகளை விரைப்படையச்
செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர்
தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும்
அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால்
காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச்
சாப்பிட்டால் தொண்டை எரிச்சல்,
கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத்
தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன்
தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்
சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும்
முன்பு சாப்பிட இரைப்பால் (asthma) ஏற்படும்
சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப்
போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில்
தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன்
கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம்,
பல்வலி ஆகியவை குணமாகும்.
கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில்
தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில்
ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த
எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம்
கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்
ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில்
அரைத்து அந்தப் பசையைத் தடவினால்
தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள
நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம்
குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய
அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த
நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச்
சுவையூட்டவும், கறி மசாலா வகைகள்
தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத்
தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும்
இது பயன்படுகிறது.