Friday, February 26, 2016

உடல் புத்துணர்ச்சிக்கு இஞ்சி அவசியம்…



இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.
இஞ்சி மருத்துவம்
இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?
காலை நோய் மற்றும் எரிச்சல்
இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.
நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.
மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்
மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்
குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா
வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்.

No comments:

Post a Comment