Thursday, February 18, 2016

மருத்துவக் குணம் நிறைந்த பூண்டு

மருத்துவக் குணம் நிறைந்த பூண்டு

இன்றைய நவநாகரிக உலகில் மானுடத்தை தாக்குகின்ற பல நோய்களுக்கு மருந்தாகி பயனளிக்கிறது.
பூண்டு தாய்ப்பாலை பெருக்கக் கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடியது. எண்ணெய் பசையும், உஷ்ணத் தன்மையும் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்துக்கு புதியதாக விளைந்த பூண்டே பலன் தரக் கூடியது என்பர். பூண்டை உபயோகப்படுத்தும் போது சில விதிமுறைகளை மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதாவது, உடற்பயிற்சி செய்த உடனேயோ அல்லது வெயிலில் அலைந்து திரிந்து இல்லம் வந்த உடனே அல்லது கடும் கோபம் கொண்டிருக்கும் போதோ பூண்டை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது. ஏனெனில், மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் உடலின் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.
அந்த சமயத்தில் பூண்டை உணவாக சேர்ப்பதால் மேலும் உடலின் வெப்பநிலை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு நேரும் என்பதே காணரமாகும். பூண்டு ஒரு நோய் தணிச்சி (ஆன்டி பயாமிக்) பலமான கிருமி நாசினி (பேக்டிரியோ ஸ்டேட்டிக்), பூஞ்சை காளான் கொல்லி (ஃபங்கிசைட்), வயிற்றுப் புழுக் கொல்லி (ஆன்த் எல்மின்திக்) ரத்த நாள அழர்ச்சியை தடுப்பது (ஆன்டி த்ராம்பிக்), ரத்த அழுத்தத்தை குறைப்பது (ஐப்போ டென்சிவ்), ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கக் கூடியது (ஐப்போகிளை சிமிக்) ரத்தத்தில் உள்ள கொழும்புச் சத்தைக் குறைக்கக் கூடியது (ஜபேஜா கொலஸ்டிரோலமிக்), மேல் சுவாச அறைக்கோளாறுகளைக் கண்டிக்கக் கூடியது,
அடைப்பு ஆகியவற்றைக் தடுக்கக் கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது மூத்திரவர்த்தினி (டையூரிடிக்) சளியைக் கரைக்கக் கூடியது. (எக்ஸ்பெக்டோரண்ட்) என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
அறுவை சிகிச்சைக்கு முன்பு சில நாட்கள் பூண்டை தவிர்ப்பது நல்லது. இது இரத்தம் உறைகின்ற நேரத்தை அதிகப்படுத்தும்
ஐந்து முதல் பத்து திரிவரையில் பூண்டைத் தோல் உரித்து எடுத்து பாலில் வேகவைத்து நெய்யும் சர்க்கரையும் போதிய அளவு சேர்த்துப்பிசைந்து உள்ளுக்கு சாப்பிட சீதக்கழிச்சல் குணமாகும்.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்யில் இரண்டுதிரி பூண்டை நசுக்கிச் சேர்த்து காதில் ஓரிரு சொட்டுகள் விட்டுவர விரைவில் காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியன குணமாகும்.
பூண்டை உரித்து சில திரிகளோடு கொஞ்சம் உப்பு சேர்த்துக் குழைத்து மேலுக்குப் பூச சுளுக்கும் அதனால் ஏற்படும் கடும் வலியும் குணமாகும்.
பூண்டை நசுக்கி அதன் சாற்றை எடுத்து உடலில் ஏற்படும் படைகள் மீது கழுவியபின் போட்டு வர சிலநாட்களில் படை தேமல் முதலியன குணமாகும்.
பூண்டைப் பால் ஆவியில் இட்டு வேக வைத்து எடுத்துக்கடைந்து அத்தோடு பனை வெல்லமும் தேனும் சிறிதளவு சுக்குத் தூளும் சேர்த்து லேகியம் போல் செய்து வைத்துக்கொண்டு தினம் இரு வேலை உண்டுவர வயிற்றுப் பெருக்க வைக்கும் வாயு வெளியேறும். வயிற்று வலியும் குணமாகும்.
பூண்டை நசுக்கிச் சாறெடுத்து 20-30 துளிகள் வரை சர்க்கரை சேர்த்துக் கொடுக்க இருமல், சுவாசகாசம், காதுவலி குளிர்சுரம் ஆகியன குணமாகும்.
சிறுநீர் சரிவர இறங்காமல் அடிவயிறு பெருக்கும் போது பூண்டை நசுக்கி நீர்விட்டுக் கிளறி அடிவயிற்றில் வைத்துக்கட்ட சிறுநீர் வெளியேறி சுகம் சேரும். கடும் காய்ச்சல் அம்மை இவை கண்டபோது தூக்கம் கெடுவதோடு வாய்ப்பிதற்றல் காணும். அந்நிலையில் பூண்டைநசுக்கி உள்ளங் காலில் வைத்துக்கட்ட பிதற்றல் குறைந்து சுகமான நித்திரை உண்டாகும்.
பூண்டைச் சாறு எடுத்து சிறிது நீருடன் சேர்த்து சீழ்பிடித்த இரணங்களைக் கழுவிவர விரைவில் புண்கள் ஆறும். பூண்டுச்சாற்றை விரலில் தொட்டு உள்நாக்கு வளர்ச்சி கண்டபோது மேலே தடவிவரவீக்கம் சுருங்கி வலியும் தணியும்.
இதய நோய்கள் பக்க சூலை, குன்மம், சுவையின்மை, சடராக்கினி குறைவு ஆகியவற்றையும் குணமாக்கும்.

No comments:

Post a Comment