Monday, February 22, 2016

தைராய்டு என் வருகிறது



பாட்டியின் வீடு எங்கும் வாபாசனை கமகமத்துக் கொண்டிருந்தது.  விவரம் தெரிந்த நாளில் இருந்து பாட்டி ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதத்தை விடாமல் செய்து வருகிறாள்.

ஆவணி ஞாயிற்றுக் கிழமை என்றால் பாட்டி காலையிலேயே படு பிசியாகி விடுவாள்.

பொழுது புலரும் முன் எழுந்து குளித்து, சூரியனை வணங்கி நெற்றியில் மூன்று விரல்பட திருநீறணிந்து, அடுப்பை மெழுகி சமையலைத் தொடங்கி விடுவாள்.

மதியம் சாமி கும்பிட்டு, விரதம் விடும் வரைக்கும் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது.   அவ்வளவு தீவிரம்.

அவரைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பச்செடி பயிற்றுக் குழியில் இருந்து பறித்த பச்சை புடலங்காயை அரைவேக்காடாக நெய்விட்டு வதக்கிய பொறியல், பாசிப்பருப்புடன் முந்திரி பருப்பு போட்டு பாயசம் என ஐம்புலன்களையும் கமகமக்க வைக்கும் திவ்வியமான சமையல்.

பின்னர் பேரன் பேத்திகளுடன் அமர்ந்து பூஜை முடிந்து, சாப்பிட்ட மயக்கம், பாட்டி சற்று ஓய்வாக அமர்ந்திருந்தாள்.

“என்ன பாட்டி, ஆவணி ஞாயிற்றுக் கிழமையும், அதுவுமா ஊரே மணக்குது.  எங்களையும் கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்து சாப்பிட்டிருப் போமுல்ல....” என்று கேட்டபடியே வந்த அம்புஜம் பாட்டி அருகே வந்து அமர்ந்தாள்.

“ஏண்டியம்மா அம்புஜம்... வயசானவங்களுக்கு ஒன்ன மாதிரி பொண்ணுக ஒத்தாசையா இருப்பீங்களா... எங்கள சமைக்க சொல்லி நீங்க சாப்பிட ஆசைப்படுவீங்களா...” என்று அம்புஜம் எதிர்பார்த்தபடியே பாட்டி ஒரு பிடி பிடித்தாள்.

“ஒருவழியாக பாட்டியை சமாளித்த அம்புஜம், எங்க பாட்டி ... உடம்பு இருக்க இருக்க பெருத்துக்கிட்டே போகுது.  கேட்டா தைராய்டுங்குறாங்க.  ஒரு வேலையும் பார்க்க முடியல.. வீட்டுக்கு விலக்காகறதும் மாதா மாதம் தள்ளிக்கிட்டே போகுது.  அதுதான் ஒங்ககிட்டே பார்த்து என்னன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்...” என்று சொன்ன அம்புஜத்தை பரிதாபமாக பார்த்தாள் பாட்டி.

“ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம்,  அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்குறதுதாண்டி அம்மா.  நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது.  இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம்.  இதையெல்லாம் நம்ம கை வைத்தியத்துல சரிபண்ணிடலாண்டியம்மா..  பயப்படத் தேவையே இல்ல...”

இப்ப நாஞ் சொல்றத கவனமா கேட்டுக்க..

 துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர்  தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4, இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு வா.. எல்லாம் சரியாப்போகும்.. என்றாள் பாட்டி.

பாட்டிக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பாட்டால் அம்புஜம்.

No comments:

Post a Comment