Wednesday, February 17, 2016

எல்லாத்துக்கும் டாக்டரா, கைவசம் இருக்குது வைத்தியம்..!!!

எல்லாத்துக்கும் டாக்டரா, கைவசம் இருக்குது வைத்தியம்..!!! எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ: *🍋 சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும். * 🍋அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். * 🍋உலர் திராட்சைப் பழத்தை, வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, காலையில் அருந்தினால், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும். * 🌿🌿வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால், நினைவாற்றல் பெருகும் . * 🌿🌿🌿🍲வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். * 🍋🍋வயிற்றுகடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடியுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். * 🌿🌿🌿புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால், பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். * 🍊கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். * 🍋எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும். * 🍜நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து, குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். * 🍏பூச்சி கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் பரவாது. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். * 🍋தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்; தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்க சுவையாக இருக்கும். *🍊 கொப்பரைத் தேங்காயை கசகசா வுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். * 🍊பச்சை கொத்தமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். * 🍎தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். * 🍎🍲வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் பூசணிக்காய் கட்டுப்படுத்தும். * 🍲ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். * 🍲சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால், இடுப்பு வலி நீங்கும் . * 🍲ரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.-www.naattumarunthu.blogspot.in

No comments:

Post a Comment