Saturday, July 9, 2022

பிஸ்தா பருப்பில் உள்ள நன்மைகள் என்னென்ன...

பிஸ்தா பருப்பில் உள்ள நன்மைகள் என்னென்ன...*
உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உண்டு என்பதால் தினமும் ஒரு வகை சாப்பிடுவதன் மூலம் பல நோய்கள் வராமல் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் பிஸ்தா பருப்பு களும் அடக்கம். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய உள்ளன.

இவை தனியாகவோ, பச்சையாகவோ, வறுக்கப்பட்டோ, அலங்கரிப்பு பொருளாகவோ, உலர் பழங்களுடனோ, அல்வா, ஐஸ்கிரீம்- வகைகளுடனும் பிஸ்தா பருப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

*சத்துக்கள்...*

பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. மேலும், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன.

பெரும்பாலும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பால் சேர்த்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். அல்லது உணவு இடைவேளை நேரங்களில் மாலை வேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பிஸ்தா பருப்புகளை தினமும் மூன்று அல்லது நான்கு பருப்புகள் எடுத்தால் போதும். எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் தவறாக சாப்பிட்டு வரலாம்.

பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் இ மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது .பச்சை மற்றும் ஊதா நிற கொட்டைகள் மூளையின் அறிவாற்றல் மேம்படுத்தவும், சிந்தித்தல் மற்றும் புரிதலுக்கான திறனுள்ள லுடெயின் மற்றும் அந்தோசயனின்களை கொண்டிருக்கின்றன. உலர் பருப்புகளில் பிஸ்தா கொட்டைகள் மூளை அதிர்வுகளைத் தூண்டி விடக்கூடிய குணங்களை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 *நீரிழிவு நோய்...*

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க தவறி விடும் போது சிறுநீரக கோளாறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு நோயால் உண்டாகும் பாதிப்புகள் வராமல் தடுக்கக்கூடிய உணவுகளில் பிஸ்தாப் பருப்புகள் முக்கியமானதாக உள்ளன. பிஸ்தா பருப்புகள் எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. உயர் ரத்த சர்க்கரை அளவை கொண்டவர்களும் பிஸ்தா பருப்பை எடுத்துக் கொள்ளும் பொழுது இன்சுலின் சுரப்பு அதிகரிப்பதாலும் உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும் உள்ளது.

ஆய்வு ஒன்றில் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிஸ்தா பருப்பை எடுத்துக் கொண்டபோது இரத்த சர்க்கரை அளவை 9% வரை குறைக்கப்பட்டது தெரியவந்தது.

பிஸ்தாவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பினொலிக் கலவைகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க கூடியவை.
 *இரத்த அழுத்தம்...*

இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பெருமளவு இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. மற்ற பருப்புகளை காட்டிலும் பிஸ்தாவில் குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது.

பிஸ்தா பருப்புகள் எடுக்கும்போது கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதய நோய் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மேலும் உடலின் கெட்ட கொழுப்புகளான எல். டி. எல். அளவு குறைவாகவும் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். அளவு அதிகரித்தும் காணப்படும் .
 *எடை குறைப்பு...*

அதிக எடை கொண்டிருப்பவர்களுக்கு எடை குறைப்புக்கு முயற்சிக்க நார்ச்சத்தும் நிறைவான புரதமும் கொண்ட பிஸ்தா பருப்புகள் எடுப்பதால், பசி உணர்வு நீண்ட நேரம் உண்டாகாது. எனவே குறைவான அளவு உணவை எடுத்துக் கொள்ள முடிவதால் எடை குறைப்புக்காக உதவுகிறது.அதேநேரத்தில், அளவுக்கு அதிகமாக நொறுக்கு தீனியாக எடுத்துக் கொண்டால், அதுவே எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

 *கண் பார்வை...*

பிஸ்தா பருப்பில் உள்ள கரோட்டினாய்டுகள் , லுடெயின் மற்றும் ஜியாக்சந்தின் போன்றவை கருவிழி சிதையை தடுக்கவும், கண் தேய்மானங்கள், கண் புரை பாதிப்புகள் வராமல் தடுக்கவும் உதவுவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
 *சரும அழகு...*

பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ ஆனது சருமத்திற்கு ஈரப்பதம் ஓட்டி சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது சூரியனிடம் இருந்து வரும் உறவுகள் சருமத்துக்கு உண்டாகும் சேதத்தை தடுத்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் இருக்கும் தாமிரம், சருமத்தில் தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.
*முடி வளர்ச்சி...*

பயோட்டின் குறைபாட்டினால் முடி உதிர்வு உண்டாகும் முடி பிளவு ஏற்படுவதும் வறட்சி உண்டாகும் உண்டு ஆனால் விசாவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இவை அனைத்தையும் சரி செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக அளிக்கின்றன.
*ஆண்மை...*

ஆண்மை குறைபாட்டை மேம்படுத்த பிஸ்தா உதவுகிறது.

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு கொண்ட சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது.

தினமும் உணவு இடைவேளையில் மூன்று அல்லது நான்கு பிஸ்தாக்களை மட்டும் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் காக்கலாம்.

No comments:

Post a Comment