Saturday, July 9, 2022

ஆடுதின்னாபாளை.


#ஆடுதின்னாபாளை.  இந்த செடியை பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்து இருக்கலாம்..
நானும் சில விஷயங்கள் சொல்கிறேன்.

இதற்கு பங்கம்பாளை வாத்து பூ அகரமூலீ   எமன் கற்ப்பம் வண்டு கொல்லி  என்ற சில  பெயரும் உண்டு ...
இதன் முழு தாவரமும் மருத்துவ குணம் கொண்டது... கசப்பான சுவை கொண்டது 
இதன் காய்கள் நெல்லிக்காய் போல குடுவை வடிவில் இருக்கும்..
இதை பல விதமான வைத்தியங்களுக்கு பயன் படுத்துகின்றன கப சுர பொடியில் இந்த செடியின் பொடியும் சேர்க்கப்படுகிறது...

பாம்பு கடித்து விட்டால் என்ன வகையான பாம்பு என்று கண்டறிய பயன் படுகிறது
இதன் வேரை பாம்பு கடித்தவர் வாயில் போட்டு மென்று சுவைக்க சுவை கசப்பாக இருந்தால் பாம்பு விஷம் இல்லை என்று சொல்லப்படுகிறது ..
இனிப்பு சுவையுடன் இருந்தால் நல்ல பாம்பு என்றும் உப்பு ருசியாக இருந்தால் விரியன் பாம்பு என்று சொல்லப்படுகிறது 

‌‌இதன் விதைகள் சுண்டக் காய் அளவு எடுத்து வெற்றிலையில் வைத்து பாம்பு கடித்தவருக்கு கொடுக்க விஷம் இறங்கும் என்று சொல்லப்படுகிறது..

இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பாம்புகள் வசிக்காது பாம்பு தொல்லை உள்ளவர்கள் இதை வீடுகளில் வளர்க்கலாம்...

இதன் இலைகளை அரைத்து ஒரு ஸ்பூன் எடுத்து பெண்கள் மாதவிடாய் முடிந்து மூன்றாவது நாளில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும் மூன்று நாட்கள் மட்டும்.. இப்படி மூன்று மாதங்கள் சாப்பிட்டால் கருப்பை கோளாறு நீங்கும் நீர் கட்டி கரையும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.‌‌..

இதன் இலைகளை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்...
 
இதன் இலைகளை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக் கொண்டு பெரியவர்கள் இரண்டு ஸ்பூன் சிறியவர்கள் ஒரு ஸ்பூன் என்று இரவில் தூங்கும் போது சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் பூச்சிகள் காலை வெளியேறும்...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு இதன் வேரை மாந்திரீகம் செய்பவர்கள் உபயோக படுத்துவார்கள்...

இதன் இலைகள் சிறுகுறிஞ்சான் மூலிகை இலைகள் சம அளவு எடுத்து சூரனம் செய்து வைத்து கொண்டு தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி அடியோடு அழிந்து போகும் ...

இந்த மூலிகை செடியின் பயன்பாடுகள் அதிகம்...

No comments:

Post a Comment