Wednesday, January 20, 2016

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

தாவரவியல் பெயர்: Nymphae nouchali Burmf 

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெண்ணிற மலர்களையுடையது வெள்ளை அல்லி எனவும், செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும், நீல மலர்களையுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும். இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும், இரத்தக் கசிவைத் தடுக்கும். 

1. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும். 

2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து காலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை, மாலை குடித்துவர சிறு நீரில் இரத்தம் சீழ் வருதல், நீர்ப்பாதைப் புண், சிறு மிகுதியாகக் கழிதல, தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும். 

3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட குடல்புண், வயிற்றுப் போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். கருவுற்றிருக்கும்போது மாதவிலக்குக் கண்டால் இதனைப் பயன்படுத்தக் குணமாகும். 

4. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக காய்ச்சி வடிகட்டியத்தில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தென் பதமாகக் காய்ச்சி காலை, மாலை 15 மி.லி.யாகச் சாப்பிட மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும், இதயப்படபடப்பைத் தணிக்கும். 

5. கருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment