Wednesday, January 20, 2016

கல்லீரல் -சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்




பூசணிக்காய் ஒரு உணவுக்காகும் காய் என்பதை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை நம் முன்னோர் கண்ணேறு (திருஷ்டி) கழிப்பதற்கெனவும் மருத்துவத்துக் கெனவும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பூசணி கொடி இனத்தைச் சார்ந்தது ஆகும். இதன் இலைகள் பெரிதாகவும் ஐந்து பிளவுகளையும் ஓரத்தில் பெற்றுள்ளது. காய்கள் மிகவும் பெரிதாகவும் உருண்ட வடிவாயும் இருக்கும். காயில் மேலும் கீழம் சற்று குழிவான அமைப்பைப் பெற்றிருக்கும். பூசணியில் இருவகை உண்டு. ஒன்று சர்க்கரை பூசணி, இன்னொன்று வெண் பூசணி. வெண் பூசணி, சர்க்கரைப் பூசணி என இரண்டுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

வெண் பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிறைப்பைப் போக்கவும், சிறுநீரக கோளாறுகளுக்கும் குறிப்பாக சிறுநீரை பெருக்கி வெளித்தள்ளவும், வயிற்றில் சேர்ந்து துன்பம் செய்யும் நாடாப் புழுக்களை வெளியேற்றும் புழுக் கொல்லியாகவும், உலர்ந்த பூசணிக்காயின் பொடி சளியுடன் ரத்தம் சேர்த்து துப்புகின்ற நோய்தனை குணமாக்கவும் வெண் பூசணியின் விதையில் இருந்து கிளைசனாட்ஸ், ``ஸ்டெரால் எஸ்ட்டர்ஸ்'' ``பாஸ்பாட்டிடைல் கோலின்'' ஆகிய கொழுப்புச் சத்தான மருத்துவவேதிப் பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.

மேலும் வெண் பூசணியின் விரையினின்று பிரிக்கப்பெறும் குடல் நோய்கள் குறிப்பாக குடற்புண்களை ஆற்றும் தன்மையுடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. சீன மருத்துவத்தில் வெண் பூசணியின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி, இருமல் ஆகிய நோய்களை போக்கவும் வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் வெண்பூசணியின் தண்டுப் பகுதியை முறையற்ற மாதவிலக்கை சீர்செய்யவும், தோலில் மேற்புறத் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணியை ஆயுர்வேதத்தில் ``கூஷ்மாண்டம்'' என்கிற பெயரால் குறிப்பிடுவர். வெண்பூசணி சூட்டைத் தணிக்கும் என்றும் அதிகமாக உட்கொள்வதால் வாதச்குடைச்சல், ஐயப்பெருக்கு, மாந்தம் இவை உண்டாகும்

www.facebook.com/NaattuMarunthu/

No comments:

Post a Comment