Wednesday, January 27, 2016

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்.

புதுடெல்லி, அக்.26-

சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது.

'BGR-34' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமன்படுத்தியும், அதிகமாக சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தியும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளை இந்த 'BGR-34' மாத்திரை பெருமளவில் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியால் அறிமுகம் செய்விக்கப்பட்ட இந்த மாத்திரை நேற்று வர்த்தகரீதியாக விற்பனைக்காக வெளியிடப்பட்டது. 100 மாத்திரைகளின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள, பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இந்த 'BGR-34' இன்னும் 15 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment