Monday, September 12, 2016

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்



"பதினான்கு வேகப்பேர்கள்,பகிர்ந்திட அவற்றைக்கேளாய்,
விதித்திடும் வாதத்தும்மல், மேவுநீர் மலங் கொட்டாவி,
சுதித்திடும் பசிநீர் வேட்கை ,காசமோடிளைப்பு நித்திரை,
மதித்திடு வாந்தி கண்ணீர், வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே,

பதினொன் சித்தர் நாடிநூல்-

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் - 01


உடலிலிருந்து வெளியேறும் காற்றினை அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

உடலின் இயற்கையான வேகங்கள் எனப்படும் இயக்கங்களைத் தடுக்கக் கூடாது என சென்ற பதிவில் பார்த்தோம். அதில் முதன்மையான உடலிலிருந்து வெளியேறும் காற்றுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
.

செரிமானத்தின் போது

வயிறு, குடல் பகுதியில் இயற்கையாக உருவாகும் காற்று வாய் வழியாக வெளியேறும் . 

(மேல்க்காற்று, ஏப்பம்) அல்லது மலவாயின் வழியே வெளியேறும் மலக்காற்று - (கீழ்க் காற்று, அபான வாயு). இந்த இரு வகையான காற்றுக்களையும் வெளியேற்றாமல் தடுத்தால் பல துன்பங்கள் ஏற்படும் என சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.

உடம்பிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயுவை முழுவதுமாகத் தடை செய்தாலும் சிறிது சிறிதாகத் தடை செய்து வெளி ஏற்றுவதாலும் மார்புப் பகுதியில் காற்று சேர்ந்து கொண்டு குத்தல் வலி ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 

# வயிற்றுப் பகுதியில் செரிக்கும் தன்மை குறைந்து புளிப்புத் தன்மை மிகுந்து அழற்சி (Inflammation – Gastritis) ஏற்படும். 

# குடல் பகுதியிலும் வாயு தங்கித் துன்பம் விளைவிக்கும். 

# பின்பு உடல் முழுமையும் குத்தல் வலி ஏற்படும். 

# மலமும் சிறுநீரும் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுத் துன்பமுண்டாகும். 

# பின்பு பசி உணர்வு சிறிது சிறிதாகக் குறையும்.
.

இப்படி வெளியேற்றாமல் தடுக்கப்பட்ட வாயு இறுதியில் புத்தியையும் மந்தப்படுத்தும்.

மொத்தத்தில் வயிற்றின் உள் உறுப்புகள் (கல்லீரல், மண்ணீரல் போன்றவை), மார்பு உறுப்புகள் (இதயம், நுரையீரல்), மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபாடடைகின்றன.

மேலும் 

# விதை வாதம் (Inflammation of Scrotum), 

# குடலிறக்கம் (Inguinal and Umbilical hernia), 

# குடல் தளர்வு (Diverticular disease of intestine – creating pockets in the intestinal wall), 

# வயிற்று உப்பிசம் (Floating abdomen) 

போன்ற பல நோய்கள் தொடரும்.

.

வயிற்றில் எப்படி அதிகப்படியான காற்று தோன்றுகிறது?

முக்கியமான இரண்டு காரணங்களால் வயிற்றில் காற்று சேருகின்றது. 

1. வாயின் வழியே காற்று உள் செல்லுதல் (Aerophagia) 

2. உணவின் மீது நுண் கிருமிகள் (Bacteria) வினைபுரிதல்.

.

வாய் வழியே காற்று உட்செல்லக் காரணங்கள் (புறக் காரணம்) 

1. உணர்வு மாறுபட்ட நிலைகளில் – கவலை, அதிக மகிழ்ச்சி, படபடப்பு. 

2. உணவு, நீர் போன்றவற்றை வேகமாக உட்செலுத்துவதால். 

3. தேவையில்லாமல் சில பொருட்களை வில் வைத்து சுவைத்துக் கொண்டோ கடித்துக் கொண்டோ இருத்தல் – Chewing gum. 

4. புகைப் பிடித்தல்.

5. காற்று கலந்த செயற்கைக் குளிர்பானங்கள் (Carbonated beverages)

.

வயிற்றினுள் அதிகப்படியாக காற்று உருவாகக் காரணங்கள் (அகக் காரணம்) :

வாயில் உணவை நன்கு மெல்லாமல் அரைகுறையாக வயிற்றுக்குள் அனுப்புவதாலும் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்தால் சரியாகச் செரிமானம் நடக்காததாலும் அரைகுறையாகச் செரிமானமான உணவு குடலைக் கடக்கும் போது குடலில் உள்ள நுண்கிருமிகள் (Bacteria) அந்த உணவின் மீது வினைபுரிந்து அதிகப்படியான வாயுவை உண்டாக்குகின்றன.
.

மேலும் சில காரணங்கள்: 

1. பழக்கமில்லாத நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல். 

2. அரைகுறையாக மென்று சாப்பிட்ட சில பழங்கள் (கொய்யா, பேரீச்சை, அத்தி, திராட்சை ) இவற்றில் உள்ள பழச் சர்க்கரை (Fructose) அதிகப்படியான வாயுவை உண்டாக்கும். 

3. முட்டைக்கோஸ், காலி பிளவர் போன்ற காய்கள் இயற்கையாகவே அதிகம் வாயுவை உண்டாக்கும். அதற்கு அவற்றில் உள்ள Raffinose என்கிற ஒருவகையான சர்க்கரை காரணமாக உள்ளது. அது போன்றே பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, கடலை மாவு, கிழங்குகள், வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற பல உணவுப் பொருட்கள் வாயுவை உண்டாக்கும். அவற்றையெல்லாம் முறைப்படி பக்குவப்படுத்தி சமைக்க வேண்டும். 

4. செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners’) வயிற்றில் நச்சுக் காற்றினை உண்டாகும். அதே போன்று சில மருந்துகளில் கலக்கப்படும் இனிப்புகளும் (Sorbital – Cough syrup) காற்று உண்டாக்கும். 

5. பால் பொருட்களில் மோரும் நெய்யும் மட்டும்தான் வயிற்றில் காற்று உண்டாக்காமல் வயிற்றைப் பாதுகாக்கும். பால், பாலாடைக்கட்டி, குழைவு (Cream) போன்ற பிற பால் பொருட்கள் வயிற்றில் காற்றினை உண்டாக்கும்.

எனவே தான் சித்தர்கள் மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்ண வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

பொதுவாக ஒரு நாளில் (24 மணியில்) வயிற்றில் உருவாகும் காற்று 450 மி.லி யிலிருந்து 1500 மி.லி வரை உருவாகி வெளியேறும். அதிகப்படியாக உருவாகும் காற்று வெளியேறாமல் இருப்பதால்தான் பல கேடுகள் உண்டாகின்றன.
.

வயிற்றில் தேவையில்லாமல் அதிகப்படியாக காற்று உருவாகாமல் தடுக்க பல உபாயங்கள் உள்ளன. எளிய 2 முறைகளை மட்டும் பார்ப்போம்.
.

1. அன்னப்போடி

சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), ஓமம், பெருங்காயம், இந்துப்பு (அல்லது கல் உப்பு) ஆகிய 7 பொருட்களையும் சம அளவு எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்த கலவைக்கு சம அளவு காய்ந்த கறிவேப்பிலைப் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்னப் பொடி என்று பெயர். இதனை சோறுடன் கலந்தோ அல்லது மோருடன் கலந்தோ உண்ண அதிகப்படியான காற்று கட்டுப்படும். 
.

2. சுக்கு, மிளகு, கிராம்பு, கல் உப்பு ஆகிய நான்கையும் சம அளவு கலந்து பொடித்துக் கொண்டு அதில் 8 சிட்டிகை அளவு (pinch) 3 வேளை உணவிற்கு முன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வாயு கட்டுப்படும்.

தும்மலை (Sneeze or Sternutation) அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

தும்மல் (Sneeze or Sternutation) என்பது மூக்கில் எற்படும் பிரச்சனைகளை (உறுத்தல், அரிப்பு) நீக்க உடலால் ஏற்படுத்தப்படும் ஒரு செயல் (Way of removing an irritation from the nose).
.

தும்மல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. 

# சில நோய் நிலைகள் தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்தும். 

# சில வேளை மூக்கின் உட்புறம் சிறு தூசி ஒட்டிக் கொண்டால் ஒரேயொரு தும்மலோடு அந்த தூசி வெளியேறும். பின்பு தும்மல் வராது. 

மொத்தத்தில் எப்படிப்பட்ட தும்மலாக இருந்தாலும் (காரணம் முக்கியமல்ல) அதனை அடக்கக் கூடாது. அது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சித்தர்கள் அடக்கக் கூடாத உடல் வேகங்களில் ஒன்றாகத் தும்மலை வகைப் படுத்தியுள்ளார்கள்.
.

தும்மல் இயல்பாக நிகழ்வதற்கு மூக்கில் இருந்து செயல்படும் ஒரு காற்றின் வேலையே காரணம். அந்தத் தும்மலைத் தடுத்தால் தலையின் உள்புறம் பல நோய்கள் உண்டாகும். மூளை பாதிக்கப்படும். கன்ம இந்திரியங்கள் (Organs of motor functions) எனப்படும் வாய், கால், கை, மலவாய், சிறுநீர் வாயில் மற்றும் ஞான இந்திரியங்கள் (Organs of sensory functions) எனப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பத்து முக்கிய உறுப்புகளும் இயல்பாக இருப்பது போன்ற தோற்றமளித்தாலும் அவை கேடடையும். அதாவது இந்த இந்திரியங்களுக்கு (உறுப்புகளுக்கு) அடிப்படைக் கூறுகள் மூளையில் இருப்பதால் அவை பாதிப்படைகின்றன.

# முகம் ஒருபுறம் கோணுதலை ஏற்படுத்தும் முகவாதம் ஏற்படும். 

# வயிற்றின் அழுத்தம் கூடுவதால் ஆண்களுக்கு விதை வீக்கம், குடல் இறக்கம் ஏற்படும். 

# பெண்களுக்கு கொப்பூழ் பிதுக்கம் (Umbilical hernia) ஏற்படும் என்று சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
.

தும்மல்:

மூக்கின் உட்புறம் உள்ள சளிச்சவ்வில் (Mucus membrane) ஏதேனும் ஒரு காரணத்தால் உருவாகும் அரிப்பு அல்லது உறுத்தல் (Irritation) மூளையின் ஒரு குறிப்பிட்ட சிறப்பான பகுதியைத் தூண்டுகிறது. அந்தப் பகுதிக்கு தும்மல் மையம் (Sneeze center) என்று பெயர். தும்மல் மையம் தூண்டப்பட்டவுடன் அது தும்மலை உருவாக்கும் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து தும்மலை உண்டாக்குகின்றது. 

# தும்மலை வயிற்றுத் தசைகள், 

# மார்புத் தசைகள், 

# உதர விதானம் (Diaphragm), 

# குரலை உண்டாக்கும் தசைகள், 

# கழுத்துத் தசைகள், 

# கண் தசைகள் 

போன்ற தசைகள் இணைந்து உருவாக்குகின்றன.
.

தும்மல் உருவாகும் போது நுரையீரலிலிருந்து காற்று மணிக்கு 100 மைல் தூரம் என்ற வேகத்தில் மூக்கின் வழியேயும் வாயின் வழியேயும் வெளியேறும். அப்போது ஏறத்தாள 5000 குட்டிக்குட்டி நீர்த்திவலைகள் (Droplets) 12 அடி தொலைவு வரை வெளித் தள்ளப்படும். இந்த நிகழ்வு மூக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அங்கு தங்கி உறுத்தலை ஏற்படுத்தும் தூசிகளையும் வெளிப்புறத் துகள்களையும் கிருமிகளையும் வேகமாக வெளியேற்றும்.
.

  தும்மல் உண்டாக்கும் காரணிகள்: 

.

1. வெளிப்புறத்திலிருந்து மூக்கிற்குள் சென்று ஒட்டிக் கொள்ளும் சிறு துகள்கள். காட்டாக தூசு, வேதிப் பொருள், புகை, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், மண மூட்டிகள், விலங்குகளின் மெல்லிய முடி, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் தோல் கழிவுகள் (Pet animal dander) தாவரங்களிலிருந்து வரும் ஒவ்வாத பொருட்கள் (Pollen) 
.

2. சுற்றுப்புறத்தின் திடீர் வெப்பநிலை மாறுபாடு. சூடு கூடுவதோ குளிர் கூடுவதோ திடீரென நிகழ்ந்தால் தும்மல் உண்டாகும். மூக்கின் உட்புறமுள்ள சிறப்பான சவ்வு நுரையீரலுக்கு ஒரே சீரான வெப்பநிலையுள்ள காற்றையே அனுப்பும். அந்தச் சவ்வு தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் போது தும்மல் ஏற்படும். 
.

3. குளிர் காற்று, சாரல், மழை. 
.

4. வயிறு முழுமையும் நிரம்பும்படியாக உணவருந்தல். 
.

5. திடீரென அதிக வெளிச்சத்தைப் பார்த்தல். 
.

6. கிருமித் தொற்று. 
.

7. சில நோய்நிலைகள்: உதாரணத்திற்கு சாதாரண மூக்கடைப்பு (சலதோடம்), மூக்கு உள்பகுதியில் ஏற்படும் அழற்சி (Rhinitis – Nasal cavity – inflammation), சுரம், மூக்கில் அடிபடுதல் (Injury to the Nasal cavity).
.

இப்படி பல்வேறு காரணங்களால் ஏற்படும் தும்மல் பொது இடங்களிலோ, முக்கியக் கூட்டங்களிலோ, அமைதியான இடத்திலோ, வழிபாட்டுத் தளங்களிலோ, பள்ளி கல்லூரி வகுப்புகளிலோ நிகழ்ந்தால் அங்கு நிலவும் அமைதியை கெடுக்கும் என்கிற எண்ணத்தால் பலராலும் அடக்குப் படுகின்றது. இவ்விதம் தும்மலை அடக்குவதால் பல்வேறு துன்பங்கள் தொடரும் என இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை எல்லாம் சித்தர்கள் பலகாலம் முன்பாக சொன்னவற்றை ஒட்டியே உள்ளன.
.

அவை: 

1. மூளையில் பரவியிருக்கும் இரத்தக்குழாய் விரிவடைந்து இரத்தத் தேக்கம் ஏற்படும் (Brain vessels – Anneurysm). மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும். இதனால் தற்காலிகமாகவோ தொடர்ச்சியாகவோ தலைவலி உண்டாகும்.
.

2. வெளியாகும் காற்று அழுத்தம் தடைபடுவதால் அந்த அழுத்தம் அப்படியே காதிற்குள் சென்று செவிப்பறையை (Ear drum) பாதிக்கச் செய்யும். சில வேளை கேட்கும் திறன் இழப்பு ஏற்படும். 
.

3. மூக்கில் தங்கியிருக்கும் (பிரச்சனையை ஏற்படுத்தும்) பொருட்களை வெளிப்படுத்தவே தும்மல் ஏற்படுகிறது. அதனைத் தடுத்தால் பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்கள் குறிப்பாக நுண்கிருமிகள் மூக்கிலேயே தங்கி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மூக்கின் உள் சவ்வு வீக்கம் ஏற்பட்டு அதன் தாக்கம் உடலின் பல இடங்களுக்குப் பரவும். 


4. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் மார்பு அறை அழுத்தத்தைப் பாதிக்கும். மார்பறை (Chest) அழுத்தம் அதிகமாவதால் இதயத்திற்குள் செல்லும் இரத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் செலுத்தப்படும். இந்த நிகழ்வு ஒருமுறை எனில் இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தொடர்ச்சியாகப் பலமுறை எனில் இரத்த ஓட்டத்திலும் இதய இயக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும். 


5. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் வயிற்றறையையும் பாதிக்கும். இதனால் வயிற்றறை அழுத்தம் அதிகமாகி குடல் பிதுக்கம் (Hernia) ஏற்படும். அது கொப்பூழ் பகுதியிலோ (Umbilical hernia) அல்லது தொடையிடுக்குப் பகுதியிலோ (Inguinal hernia) ஏற்படலாம். 
.

6. கண் அழுத்தம் அதிகமாதல், கண் உட்புறத்தில் உள்ள நுட்பமான இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுதல், இரத்தக்கசிவு ஏற்படல் போன்றவை ஏற்படும்.
.

தும்மல் வருவதற்கானக் காரணங்களை அறிந்து அவற்றை தான் நீக்குதல் வேண்டும். தும்மலை எக்காரணத்தைக் கொண்டும் அடக்கவே கூடாது.

தும்மல் வருவதைத் தடுக்க ஆவிபிடித்தல், நசியம் (மூக்குத்துளி) மருத்துவம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். 

மருத்துவ ஆலோசனை பெற்று முறையான மருத்துவம் மேற்கொண்டால் தடுத்தவிட முடியும் அல்லாமல் சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் திடீர் தும்மலை அடக்காமல் விடுதல் வேண்டும்.

Saturday, September 10, 2016

மிளகு

மிளகு

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.


"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?"
-குதம்பைச் சித்தர்-

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.


திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.


மிளகு ஊறுகாய்:
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..!


சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..!

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307 

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

நூல்கோல் மகத்துவம்:- சர்க்கரை நோய்

*நாட்டுமருந்து வாட்சப்குழு +919787472712*

நூல்கோல் மகத்துவம்:- சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க காய்கறிக் கடைகளில் கிடைக்கும் நூல்கோல் ஒன்றைச் சுத்தமாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆவாரம்பூ சிறிது சேர்த்து மிக்ஸியில் ஜூஸகத் தயாரித்துக் கொள்ளவும்.

இந்த ஜூஸ் தயாரிப்புக்கு 100 முதல் 150 மில்லி.லிட்டர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. இந்தச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். 24 மணிநேரம் கழித்து சர்க்கரை அளவைச் சோதித்தால் ரத்தத்தில் 100 மி.கி.க்குமேல் சர்க்கரை குறைந்திருக்கும். வாரம் ஒருமுறை அல்லது பத்து நாளுக்கொருமுறை இந்த ஜூஸ் குடித்தால் போதும்.

இது ஒரு நம்பகமான மருத்துவம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்....
நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

சாப்பிடக் கூடாதது

1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

அளவோடு சாப்பிடலாம்

1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.

அளவில்லாமல் சாப்பிடலாம்

1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்.                        

 நூல்கோல்
==========

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம்.

* இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.

* நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

Friday, September 9, 2016

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்..!!!

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்..!!!

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிவேண்டியதுதான்..

ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்.. ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும். சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.

சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்றொரு பெயரே உண்டு. சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும். ஆனால், ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.

கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும். மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2 பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில் வெளியாகிவிடும்.

குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?

அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை. இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும். இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான். குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி எண்ணமே இருக்காது.

இருமல் ஏன்?

டயாபர் ஒவ்வாமை குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும் இருமல் பிரச்னைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய துணியில் ஈரமாக்கி குழந்தையின் தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை. அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும். தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அல சினால் பொடுகு குணமாகும். இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...

*நாட்டுமருந்து வட்சப்குழு +919787472712*

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது :
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது :
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் :
மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் :
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று :
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை :
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது :
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது :
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது :
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது :
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது