Tuesday, February 21, 2023

தலையில் ஏற்படும் புண்,அரிப்பு,பொடுகு, எரிச்சல் ஆகியவை சரியாக ஒரு இயற்கை முறை வைத்தியம்

🪷 *தலையில் ஏற்படும் புண்,அரிப்பு,பொடுகு, எரிச்சல் ஆகியவை சரியாக ஒரு இயற்கை முறை வைத்தியம்* 🪷

⚜️ *தேவையான மூலப்பொருட்கள்* ⚜️

▪️மருதாணி இலை - 50கிராம்
▪️சிவனார் வேம்பு - 25 கிராம்
▪️வேப்பிலை - 25 கிராம்
▪️கோரைக்கிழங்கு - 25 கிராம்
▪️சீரகம் - 2 ஸ்பூன் அளவு

⚜️ *செய்முறை விளக்கம்* ⚜️

மேற்கூறிய மூலபொருட்கள் அனைத்தையும் தண்ணீர் விட்டு மைய்ய அரைத்து வைத்து கொள்ளுங்கள்

தேவைக்கு மட்டும் அரைத்து அப்போதைக்கு பயன்படுத்துங்கள்

⚜️ *பயன்படுத்தும் முறை* ⚜️

தயார் செய்ததை குளிக்க செல்லும் 30 நிமிடம் முன் தலை முடியின் ஆணி வேர் பகுதியில் தேய்த்து நன்கு ஊற வைக்கவும்..

பிறகு வெது வெதுப்பான நீரில் குளிக்கவும்

⚜️ *மருத்துவ நன்மைகள்* ⚜️

இந்த மருத்துவ முறையை வாரம் 2 முறை செய்யும் பொழுது தலையில் ஏற்படும் புண்,அரிப்பு,எரிச்சல்,பொடுகு என அனைத்தும் நீங்கும்

அருமையான பலனை கொடுக்கும்

🙏🏼நன்றி🙏🏼
💞ரிஷிநேத்ரா💞

No comments:

Post a Comment