Tuesday, September 28, 2021

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி


செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். 

இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி நொய் - கால் கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மோர் - 1 கப்

செய்முறை :

🍵 வாணலியில் ஓமத்தையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். 

🍵 புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் குழைய வேகவையுங்கள். 

🍵 ஓமத்தை மிக்ஸியில் பொடித்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்ததும் வடிகட்டுங்கள். 

🍵 இந்த ஓமத் தண்ணீருடன் வேகவைத்துள்ள கஞ்சியில் சேர்த்துப் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பரிமாறுங்கள். 

🍵 கடைசியாக அதனுடன் மோர் சேர்த்தும் குடிக்கலாம்.

♨️ வயிறு உப்புசத்தையும் செரிமானக் கோளாறையும் இந்தக் கஞ்சி சீராக்கும்.

1 comment:

  1. Coin Casino Review: Is This a Legit Site to Play? - Casinoworld
    Casino review — Read our coin 1xbet korean casino review and find 제왕카지노 out if 인카지노 this casino is a legitimate and reliable online casino to play.

    ReplyDelete