Saturday, September 25, 2021

உடல் எடையை குறைக்கும்.. முருங்கை கீரை சூப்..


உடல் எடையை குறைக்கும்.. முருங்கை கீரை சூப்.. 

உடல் எடை குறைய மிக எளிமையான வழி
இன்று நம்மில் பலர் சந்திக்கும் சிக்கல்கள் அதிகப்படியான உடல் எடை, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள். தினசரி இதை நாம் அனுபவிப்பதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். 

மேலும், அதற்கான தீர்வை தேடி அலைகிறோம். இதை இன்றைய சந்தை பயன்படுத்தி கொள்கிறது. அதில் முக்கியமாக நாம் முயற்சிப்பது டயட். முழுமையாக அதனை பயன்படுத்தும் முறையோ, அதன் பக்க விளைவுகளோ தெரியாமல் முயற்சித்து மேலும் துன்பத்துக்கு ஆளான பலர் நம்மில் உண்டு.

மேற்சொன்ன உடல் சிக்கல்கள் நமது ஆரோக்கியத்துக்கு கேடு என்பது உண்மைதான். ஆனால், அதற்காக முழுதாக தெரியாத ஒரு விஷயத்தை செய்து பின்விளைவுகள் அனுபவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த எல்லா சிக்கல்களுக்கும் நமது மரபு வழியில் ஒரு எளிய தீர்வு இருக்கிறது. சூப்🥣 அருந்துவது தான் அந்த வழி.

தினசரி இருவேளை நமக்கு பிடித்த சூப்  ஒன்றை எடுத்துகொள்வது நமது அனைத்து உடல் சிக்கல்களுக்கும் தீர்வைத்தரும். குறிப்பாக, உடல் எடை குறைய சிறந்த வழி.✔ இருந்தாலும் நமது உடலுக்கு என்ன சத்து வேண்டும்? என்ன சூப் அருந்த வேண்டும்? என்பதும் ஒரு கேள்விதான். தினமும் ஒரு வகை சூப் தயாரிக்க நமக்கு நேரத்தை இந்த வாழ்க்கை முறை தரவில்லையே! என்று யோசிப்பதும் சரிதான். எல்லா சிக்கல்களுக்கும் இவ்வுலகில் தீர்வுண்டு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதற்கும் ஒரு விடை இருக்கிறது.

முருங்கை இலை சூப் உடல் எடை குறைவதற்கு மட்டும் இல்லாமல் உடலில் என்ன உபாதைகள் இருந்தாலும் அதை சமன் செய்து ஆரோக்கியத்தை கொடுக்கும் சிறந்த மூலிகை நம்ம ஊர் முருங்கை. அதிலும் நாட்டு முருங்கை இலையை பொடியாக்கி சூப் செய்வதற்கு ஏதுவாக பொடியாக்கி வைத்துக்கொண்டால் தினமும் ஒரு ஸ்பூன் சுடுநீரில் போட்டு குடித்தால் போதும், நமது ஆரோக்கியத்திற்குவேறு எதுவும் தேவையில்லை.

குறிப்பாக இரவு நேர உணவுக்கு முன் இந்த சூப் அருந்தினால் உடல் எடை குறைவதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.

நம் நலன் கருதி வெளியிட படுகிறது.

No comments:

Post a Comment