Sunday, March 10, 2019

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம்

ஹெர்பல் ஷாம்பு!!

நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
உலர்ந்த சிகைக்காய்
உலர்ந்த நெல்லிக்காய்
ரீத்தா (பூந்தி கொட்டை)
தண்ணீர்
ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை:
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த நெல்லிக்காய் - 1/2 கப்
உலர்ந்த சிகைக்காய் - 1/2 கப்
பூந்தி கொட்டை - 10
தண்ணீர் - 1.5 லிட்டர்
செய்முறை:
முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

No comments:

Post a Comment