Monday, May 9, 2016

தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..



தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..

கோ டை வெயில் கொளுத்த ஆரம்பிச்சுடுச்சு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவும் விட்டாச்சா?! பகலெல்லாம் வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வெச்சு சமாளிப்பது கஷ்டமான காரியம்தாங்க!

‘தாகம்’னு அடிக்கடி ஃப்ரிஜ் தண்ணியை எடுத்து குடிக்கப் போறாங்க. அது, உடம்பு சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது. அதை விட நன்னாரி வேர் ஊறப்போட்ட தண்ணியை குடிக்கச் சொல்லுங்க. உடம்பு உஷ்ணம், தாகம் சட்டுனு தணியும். மலையாளத்துக்காரங்க எல்லாம் சீரகம் ஊற வச்ச தண்ணியைத்தான் குடிப்பாங்க. கோடைக் காலத்துக்கு உடம்பை குளுமை பண்ற அருமையான தண்ணி அது. அதுல துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதுத் தண்ணியைத் தயார் பண்ணணுங்க.

வெயில் நேரத்துல குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதைத் தடுக்க, ஒரு வாளி நிறைய தண்ணியில நிறைய வேப்பிலையை போட்டு வெயில்ல வச்சுடுங்க. தண்ணி சூடானதும் வேப்பிலையை எடுத்துப் போட்டுட்டு குளிங்க. கிருமிகள்கிட்டேயிருந்து உடம்பை காக்கிற அருமையான கிருமிநாசினி தண்ணி இது!

பெண்கள்னா உடம்புல மஞ்சளும் ஆண்கள்னா கொஞ்சம்போல சந்தனமும் பூசி, நல்லா தேய்ச்சி இந்த தண்ணியில குளிச்சா, அதோட பலனே தனி! ஒரு பக்கெட் தண்ணிக்கு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சு குளிச்சா, வியர்வை நாற்றம் நீங்கி இன்னும் ஃப்ரெஷ்ஷா இருக்கலாம்.

குழந்தைகளுக்கு ரெடிமேட் ஜூஸ்கள்லாம் வாங்கிக் கொடுக்காம இளநீர், நீர்மோர்னு குடிக்க வைக்கிறது ரொம்ப நல்லது. அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ‘கேரட் கீர்’ பண்றது எப்படினு சொல்றேன்.

கேரட்டை தோல் சீவி நல்லா கழுவிக்குங்க. கால் கிலோ கேரட்டுக்கு மூணு பெரிய சில்லு தேங்கா சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்ஸில மையா அரைச்சுக்குங்க. அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூஸை மட்டும் எடுத்து தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க. வெயில் நேரத்துல சாப்பிடப் பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி டிரிங்க் தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும். சொல்றது புரிஞ்சுதா?

No comments:

Post a Comment