இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா?
தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் 'அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.
தர்ப்பூசணியில், 'ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
No comments:
Post a Comment