தேவையான பொருட்கள்.:
சோம்பு - ஒரு தேக்கரண்டி,
இலவங்க பட்டை - அரை தேக்கரண்டி,
இஞ்சி தூள் - ஒரு தேக்கரண்டி,
தண்ணீர் - 100 மி.லி.
செய்முறை.:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் நீருடன் சோம்பு,இலவங்க பட்டை மற்றும் இஞ்சி தூள் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் வறட்டு இருமல் முற்றிலுமாக குணமாகும்
மற்றோரு வழிமுறை.:
பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.
வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.
No comments:
Post a Comment