*நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான இயற்கை எண்ணெய்*
*தேவையான பொருள்*
1.மஞ்சள் பொடி - 15 கிராம்
2.சந்தன தூள் - 5 கிராம்
3.கிச்சிலி கிழங்கு - 5 கிராம்
4.கோரை கிழங்கு - 5 கிராம்
5.கசகசா - 5 கிராம்
6.நல்ல எண்ணெய் - 100 மி.லி
*செய்முறை*
✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
✍️பிறகு நல்லஎண்ணெய் தவிர மீதம் உள்ள பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
✍️பிறகு 100 மி.லி நல்லஎண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
✍️மேலும் நல்லஎண்ணெய் உடன் இடித்து பொடியாக்கப்பட்ட பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
✍️மேலும் இந்த பொருட்களை நன்கு தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
✍️பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இந்த தைலத்தை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு நரம்பு வலி மற்றும் நரம்பு வீக்கம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் நரம்பு வலி முற்றிலுமாக நீங்கும்.
No comments:
Post a Comment