🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
*தலைபாரம் / சைனஸ் தலைவலி குணமாக பற்று*
தனியா பொடி - கால் தேக்கரண்டியளவு
சுக்கு - 1
கற்பூரவல்லி இலை - 3
துளசி - 5
வெற்றிலை - 1
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை கற்பூரம் - 1 துண்டு
தனியா, கிராம்பு இரண்டையும் அரைத்து சலித்து வைக்கவும்
துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுத்து அதில் தனியா கிராம்பு பொடியை சேர்த்து மீண்டும் அரைக்கவும்
சுக்கை உரை கல்லில் சுடுநீர் விட்டு உரசி பசை போல் குழைத்து சிறிது எடுத்து கொள்ளவும்...
இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து இந்த கலவையை நெற்றியில் பற்றிடவும்...
இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்...
படுக்க போகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பற்றிடலாம்...
ஒரு இரவிலேயே தலையில் உள்ள நீரை உறிஞ்சும் தன்மை இந்த பற்றுக்கு உண்டு...
2. பச்சரிசியை ஒரு கிலோ அளவு எடுத்து மூட்டையாக கட்டி தலையணைக்கு பதிலாக தலைக்கு அடியில் வைத்து தூங்கவும்
3. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீர் கோர்வை மாத்திரையை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பற்றிடலாம்
4. சுக்கை மட்டும் இழைத்து பற்றிடலாம்
5. நொச்சி இலை, வேப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்கலாம்...
நன்றி🙏🏼🌹
No comments:
Post a Comment